அருவியில் சறுக்கும் அனுஹாசன்.. இவர விட்டா குணா குகையில கூட குதிப்பாரு போல.. செம த்ரில் வீடியோ!

சென்னை: 53 வயதிலும் நடிகை அனு ஹாசன் எந்தவொரு பயமும் இன்றி இளைஞர்களுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு சம்மர் வீக்கெண்டை என்ஜாய் செய்து வருகிறார். அருவிக்கு அடியில் குளித்து பார்த்திருப்போம். அருவியில் சறுக்கி விளையாடியதை பார்த்துருக்கீங்களா என்பது போல அனு ஹாசன் அருவியில் சறுக்கி விளையாடும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை திகிலடைய செய்துள்ளார்.

உலக நாயகன் கமல்ஹாசனின் அண்ணன் மகளான அனு ஹாசன் தமிழில் இந்திரா, ஆளவந்தான், நள தமயந்தி, ரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மற்ற மொழிப் படங்களிலும் சிறப்புத் தோற்றத்தில் நடித்து வரும் அனுஹாசன் இந்த வயதிலும் செம ஃபிட்டாக தன்னை வைத்திருக்கிறார்.

Anu Haasan slides at waterfalls video stuns fans

தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் அனு ஹாசன் சாகச வீடியோக்களை வெளியிட்டு அவர் வயதுடைய பெண்களையும் சக நடிகைகளையும் பொறாமைப்பட வைத்து வருகிறார்.

யாரு இந்த அனுஹாசன்?: சந்திரஹாசன், சாருஹாசன், கமல்ஹாசன் மூவரும் அண்ணன் தம்பிகள். அதில், மூத்த அண்ணனான சந்திரஹாசன் மகள் தான் நடிகை அனு ஹாசன். 53 வயதாகும் அவர் ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் தன்னை வைத்திருக்கும் நிலையில், தொடர்ந்து சோஷியல் மீடியாவில் தான் எப்படி எல்லாம் ரியல் லைஃப்பில் ஆக்டிவாக இருக்கிறேன் என்பதை காட்டி வருகிறார்.

இந்திரா ஹீரோயின்: 1995ம் ஆண்டு சுஹாசினி இயக்கத்தில் வெளியான இந்திரா படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் அனு ஹாசன். அரவிந்த் சாமி ஹீரோவாக நடித்த அந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்தார். அந்த படத்திற்கு பிறகு ஹீரோயினாக இவர் நடிக்கவே இல்லை. ஆளவந்தான் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த இவர், ரன், நள தமயந்தி, ஆஞ்சநேயா, சந்தோஷ் சுப்ரமணியம், தாம் தூம், சர்வம், ஆதவன், புத்தம் புது காலை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த வயதிலும் இப்படியா?: 53 வயதாகும் நடிகை அனு ஹாசன் அந்தர் பல்டி அடிப்பது, பாக்ஸிங் செய்வது, கம்பி மீது ஏறுவது, மோட்டார் பைக் ஓட்டுவது என எப்போதுமே தன்னை ஃபிட்டாகவும் எனர்ஜியுடனும் வைத்திருக்கிறார். இந்நிலையில், சம்மர் வெயிலுக்கு எல்லாரும் எங்கேடா வெகேஷன் போகலாம் என நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அனு ஹாசன் தரமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அருவியில் சறுக்கும் அனுஹாசன்: வாட்டர் தீம் பார்க்குகளில், வாட்டர் ஸ்லைடிங்கில் அனைவரும் சறுக்கி விளையாடுவதை பார்த்திருப்போம். ஆனால், இயற்கையாக உருவாகி உள்ள அருவியின் பாறையில் அப்படியே கைகளை தலைக்கு மேல் தூக்கியபடி சறுக்கி குளம் போல இருக்கும் தண்ணீருக்குள் குதிக்கும் வீடியோவை அனு ஹாசன் வெளியிட்டு ரசிகர்களின் ஹார்ட்டு பீட்டை எகிற வைத்துள்ளார். இவரை விட்டால் குணாவின் டெவில்ஸ் கிட்சனிலேயே குதித்து இறங்கிவிட்டு மறுபடியும் ஏறி வந்து விடுவார் போல என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X