ஹாட்டான உடையில் இணையதளத்தை கொதிக்கவிடும் அனு இமானுவேல்!
சென்னை : நடிகை அனு இமானுவேல் தமிழ் சினிமாவிற்கு துப்பறிவாளன் படத்தின் மூலம் அறிமுகமானார்
அதன்பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நம்ம வீட்டு பிள்ளையில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானார்.
தமிழ் மலையாளம் தெலுங்கு என மூன்று மொழிகளிலும் கலக்கி கொண்டிருக்கும் அனு இமானுவேல் இப்பொழுது படங்களில் கவர்ச்சி காட்டவும் ஆரம்பித்திருக்க இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஹாட்டான உடையில் பார்க்கும் அனைவரையும் பற்ற வைக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்

டிடெக்டிவ் ஏஜென்டாக
மலையாளத்தில் நடிகர் நிவின் பாலியின் நடிப்பில் வெளியான ஆக்சன் ஹீரோ பிஜு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் முதல் முறையாக திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை அனு இமானுவேல். அதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவிற்கு துப்பறிவாளன் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார் . இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் டிடெக்டிவ் ஏஜென்டாக நடித்திருந்த துப்பறிவாளன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றாலும் அனு இமானுவேல் சில காட்சிகளில் மட்டுமே வந்து செல்வார்.

தமிழில் கவனிக்கப்படவில்லை
துப்பறிவாளன் திரைப்படத்தில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடித்து இருந்தாலும் ரசிகர்களால் அந்த அளவிற்கு கவனிக்கப்படவில்லை இந்த நிலையில் தெலுங்கில் இவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாக குவிய தெலுங்கு பட உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். தெலுங்கில் இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்ற சூழலில் இப்பொழுது முன்னணி நடிகையாக முன்னேறி உள்ளார்.

சிவகார்த்திகேயனுடன் கெமிஸ்ட்ரி
தமிழிலும் தனி இடத்தைப் பிடிக்க போராடிக் கொண்டிருக்கும் அனு கடைசியாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் நடித்திருந்தார். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் குடும்ப கதை களத்தில் உருவான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் சிவகார்த்திகேயன் மற்றும் அனு இமானுவேல் கெமிஸ்ட்ரி அதில் நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்க இப்பொழுது தமிழிலும் அனு இம்மானுவேல் பிரபலமாகியுள்ளார்.

கருப்பு ஹாட்டான உடையில்
இருப்பினும் தெலுங்கில் அதிக கவனம் செலுத்திவரும் அனு இமானுவேல் இப்பொழுது நடிகரும் தயாரிப்பாளருமான அல்லு சிரிஷ் உடன் இணைந்து பிரேம காதன்டா என்ற ரொமான்டிக் காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் இதுவரை நடித்த இரண்டு திரைப்படங்களிலும் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்த இமானுவேல் தெலுங்கில் அதற்கு அப்படியே ஆப்போசிட்டாக கவர்ச்சியை அள்ளி தெளிக்கிறார். சமூக வலைதளங்களிலும் அதீத கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர் இப்பொழுது கருப்பு ஹாட்டான உடையில் பார்க்கும் அனைவரையும் பற்றவைக்கும் கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையதளத்தை கொதிக்கவிட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications