விஜய் சேதுபதி பட ஹீரோயினா இப்படி?.. இந்தியன் 2 படத்துல வர காலண்டர் சாங்ல வர டிரெஸ்ஸோட நிக்கிறாரே!

சென்னை: இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த டிஎஸ்பி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த மாடல் அழகியான அனுக்ரீத்தி வாஸ் உச்சக்கட்ட கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

திருச்சியை சேர்ந்த அனுக்ரீத்தி வாஸ் சென்னை லயோலா கல்லூரியில் பட்டம் பெற்றார். ஃபேஷன் துறையில் அவருக்கு இருந்த ஆர்வம் காரணமாக பல அழகிப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். மிஸ் ஃபெமினா தமிழ்நாடு மற்றும் மிஸ் ஃபெமினா இந்தியா உள்ளிட்ட அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு டைட்டில் வென்றவர் தான் இந்த அனுக்ரீத்தி வாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

anukreethy vas vijay sethupathi heroine

கடந்த 2022ம் ஆண்டு வெளியான டிஎஸ்பி படத்தில் அறிமுகமான இவர் தெலுங்கு, இந்தி என தற்போது கலக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

anukreethy vas vijay sethupathi heroine

விஜய் சேதுபதி பட ஹீரோயின்: 2018ம் ஆண்டு மிஸ் ஃபெமினா அழகிப் போட்டியில் மகுடம் சூடிய அனுக்ரீத்தி வாஸ் 2022ம் ஆண்டு வெளியான விஜய் சேதுபதியின் டிஎஸ்பி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். விஜய் சேதுபதி, ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்த அந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அந்த படத்திற்கு பிறகு தெலுங்கில் கடந்த ஆண்டு டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் மூலம் டோலிவுட்டிலும் அறிமுகமானார். இந்த ஆண்டு இந்தியில் வெளியாகவுள்ள விஸ்ஃபாட் எனும் இந்தி படத்தில் இடம்பெற்ற பாடலில் கவர்ச்சி நடனம் போட்டுள்ளார். வெற்றி எனும் தமிழ் படத்திலும் இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

anukreethy vas vijay sethupathi heroine

இந்தியன் 2 காலண்டர் சாங்ல வர மாதிரி: திருச்சியை சேர்ந்த அனுக்ரீத்தி வாஸ் மாடல் அழகிப் போட்டிகளில் பங்கேற்று வரும் நிலையில், ஃபேஷன் துறையிலும் ரொம்பவே ஆர்வம் கொண்டுள்ளார். இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தியன் 2 படத்தின் காலண்டர் சாங் பாடலில் வருவது போல படு கவர்ச்சியான உடையுடன் இவர் கொடுத்துள்ள போஸை பார்த்த கோலிவுட் ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

anukreethy vas vijay sethupathi heroine

ராக்ஸ்டார்: படுகவர்ச்சியான உடையை அணிந்துக் கொண்டு கையில் கிட்டார் ஒன்றையும் வைத்துக் கொண்டு இந்தி படமான விஸ்ஃபாட் படத்தில் இடம்பெற்றுள்ள "காம்லி நாம் பியா டா" பாடலுக்காக கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ள அனுக்ரீத்தி வாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த பாடல் ஷூட்டிங்கின் போது எடுத்துக் கொண்ட போட்டோக்களை வெளியிட்டுள்ளார். மேலும், அந்த பாடலை யூடியூபில் பார்க்காதவர்கள் உடனடியாக சென்று பார்க்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அனுக்ரீத்தி வாஸை இந்த கோலத்தில் பார்த்த ரசிகர்கள் நீங்க பெரிய ராக்ஸ்டார் என கமெண்ட் போட்டு கொண்டாடி வருகின்றனர்.

anukreethy vas vijay sethupathi heroine

ஜெனிலியா கணவர் படத்தில்: நடிகை ஜெனிலியாவின் கணவரும் பாலிவுட் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக்கின் இந்தி படமான விஸ்ஃபாட்டில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு படுகிளாமரில் நடனம் போட்டுள்ள அனுக்ரீத்தி வாஸின் அழகை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். யூடியூபில் அந்த பாடலை ஏகப்பட்ட ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். அனுக்ரீத்தி வாஸின் திடீர் பாலிவுட் அவதாரத்தை பார்த்து பதறிப்போன பலர் விஜய் சேதுபதியின் டிஎஸ்பி படத்தில் ஹோம்லியாக நடித்தவரா இப்படி அரையும் குறையுமாக உடை உடுத்திக் கொண்டு ஆடுவது என கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X