ரொம்ப வக்கிரம் புடிச்சு அலையுறானுங்க.. எத்தனை தடவை தான் பிளாக் பண்றது.. பிரபல நடிகை ஆவேசம்!
கேரளா: பிரபல மலையாள நடிகை அனுமோல், தனது சமூக வலைதள பக்கங்களில் வக்கிரமான பதிவுகளை இட்டு வரும் நெட்டிசன்களை விளாசித் தள்ளி உள்ளார்.
தமிழ், மலையாளம் மற்றும் வங்காளம் என பல்வேறு மொழிகளில் திறமையான நடிப்பை நடிகை அனுமோல் வெளிப்படுத்தி உள்ளார்.
33 வயதாகும் நடிகை அனுமோல், கடந்த 2010ம் ஆண்டு தமிழில் வெளியான கண்ணுக்குள் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகுக்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலியல் தொல்லை
பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை நாடு முழுவதும் அதிகரித்துக் கொண்டே போகிறது. பலாத்கார சம்பவங்கள், ஆசிட் வீச்சுகள், கடத்தல், கொலை என நாள் தோறும் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே போகிறது. சட்டங்களும் காவல் துறையும் இருந்தாலும் இதனை இதுவரை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது தான் வேதனையான ஒன்று.

ஆன்லைன் அட்டகாசம்
சமூக வலைதளங்களை பல நல்ல காரியங்களுக்கும், தங்கள் அறிவுரை பெருக்கிக் கொள்ளவும் பலர் பயன்படுத்தி வந்தாலும், சில வக்கிர எண்ணம் கொண்டவர்கள், ஆபாசமான கமெண்ட்டுகளையும், புகைப்படங்களையும் பதிவிட்டு, சமூக வலைதளங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களை விர்ச்சுவலாக நடத்தி வருகின்றனர்.

மலையாள நடிகை
இந்நிலையில், காட் ஃபார் சேல், அமீபா, பிரேம சூத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை அனுமோல், தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து சில நெட்டிசன்கள், தங்கள் ஆபாச படங்களை பதிவிட்டும், ஆபாசமான கமெண்ட்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர் என பொங்கி எழுந்துள்ளார்.
Recommended Video

எத்தனை முறை பிளாக் பண்றது
மேலும், இதுபோன்ற வக்கிரம் புடிச்சவங்களை எத்தனை தடவை தான் பிளாக் பன்றது என்றே தெரியவில்லை. மேலும், ஒரு ஐடியை குறிப்பிட்டு, இவனை பல முறை பிளாக் பண்ணிட்டேன். ஆனால், தொடர்ந்து வேறு வேறு பெயர்களில் வந்து தொல்லை கொடுத்துட்டே இருக்கான் என புலம்பியுள்ளார்.

இதோட நிறுத்திக்கோங்க
ஒரு கட்டத்தில் மனமுடைந்து போன நடிகை அனுமோல், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தயவு செய்து இதோட எல்லாத்தையும் நிறுத்திக்கோங்க, நான் உங்களை பிளாக் பண்ணி பிளாக் பண்ணி டயார்டு ஆகிட்டேன். சகிக்கலை, இதற்கு மேல தொடர்ந்தால் சைபர் கிரைமில் புகார் அளிக்க வேண்டி வரும் என கொந்தளித்துள்ளார். இதுபோன்ற பிரச்சனைகளில் இவர் மட்டுமின்றி பல நடிகைகள் பல பெண்கள் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











