இந்த போட்டோவை பார்த்து அழுதுட்டேன் தெரியுமா?: தனுஷ் ஹீரோயின்

By Siva

திருவனந்தபுரம்: கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் சிறுமி ஒருவர் செய்த செயலை பார்த்து நடிகை அனுபமா பரமேஸ்வரன் அழுதுள்ளார்.

கேரளாவில் கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மாநிலத்தில் உள்ள 24 அணைகள் திறந்து விடப்பட்டன. வெள்ளத்தில் தத்தளித்த கேரள மக்களுக்கு பிற மாநில முதல்வர்கள் நிவாரண உதவி அறிவித்தனர்.

Anupama cries after seeing a picture

வெள்ளத்தில் மக்கள் தத்தளித்த புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி பிற மாநில மக்களை கவலை அடைய வைத்தன. வெள்ளத்தின்போது கழுத்தளவு நீரில் சிறுமி ஒருவர் ஒரு பாத்திரத்தில் தான் வளர்க்கும் செல்ல நாயை பத்திரமாக வைத்து தனது தலையில் வைத்துக் கொண்டு சென்றபோது எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலானது.

Anupama cries after seeing a picture

நீரில் தத்தளித்தாலும் நாய்க்குட்டியை காப்பாற்ற வேண்டும் என்ற சிறுமியின் எண்ணத்தை பலரும் பாராட்டினார்கள். அந்த சிறுமியின் புகைப்படத்தை பார்த்த நடிகை அனுபமா பரமேஸ்வரன் அழுதுவிட்டாராம். கேரள வெள்ள நிவாரண நிதிக்கு அனுபமா ரூ. 1 லட்சம் அளித்துள்ளார்.

பிரேமம் படம் மூலம் நடிகையானவர் அனுபமா பரமேஸ்வரன். அவர் தனுஷின் கொடி படம் மூலம் கோலிவுட் வந்தார்.

அனுபமா பார்த்த புகைப்படத்தை நடிகை த்ரிஷா பார்த்தால் நிச்சயம் நெகிழ்ந்து போய்விடுவார். அவருக்கு நாய்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X