காந்த பார்வையால் ரசிகர்களை விழுங்கும் அனுபமா பரமேஸ்வரன்!

சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் அனுபமா தள்ளிப்போகாதே திரைப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மலையாளம்,தமிழ்,தெலுங்கு என மூன்று மொழிகளிலும் பிரமாதமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அனுபமா தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்

சமூக வலைதளங்களில் அடிக்கடி இவர் வெளியிடும் புகைப்படங்கள் வைரலாகி வெற்றி பெற இப்பொழுது சிகப்பு லைட் வெளிச்சத்தில் காந்த பார்வையால் விழுங்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

மூன்று கதாநாயகிகளில் ஒருவராக

மூன்று கதாநாயகிகளில் ஒருவராக

மலையாள சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன் இப்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடித்த பிரேமம் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து அறிமுகம் செய்யப்பட்ட நடிகை அனுபமா பரமேஸ்வரனுக்கு இந்தப்படம் மிகப்பெரிய அறிமுகத்தை பெற்றுத் தந்தது.

நீண்ட காலமாக தமிழில் நடிக்கவில்லை

நீண்ட காலமாக தமிழில் நடிக்கவில்லை

பிரேமம் வெற்றியை தொடர்ந்து தமிழுக்கு கொடி படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். நடிகர் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இந்த திரைப்படம் அரசியல் கலந்த ஆக்சன் திரைப்படமாக வெளியானது. அனுபமா மற்றும் த்ரிஷா என இரண்டு கதாநாயகிகள் இந்த படத்தில் நடித்திருக்க கொடி படமும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. அதன் பிறகு அனுபமா தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த தமிழ் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் நீண்ட காலமாக தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

தள்ளிப்போகாதே

தள்ளிப்போகாதே

இந்த நிலையில் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி அங்கு படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வருகிறார். இந்த இந்நிலையில் தமிழ் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று இப்பொழுது மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் தெலுங்கில் நானி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நின்னுக்கோரி தமிழில் தள்ளிப்போகாதே என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு தற்போது வெளியாகியுள்ளது.

பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு

பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு

பூமராங் படத்திற்கு பிறகு அதர்வா மற்றும் இயக்குனர் ஆர் கண்ணன் கூட்டணியில் தள்ளிப்போகாதே உருவாகியுள்ளது. இயக்குனர் ஆர் கண்ணன் இப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார். அதர்வா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இறுதியாக தற்போது வெளியாகி உள்ளது . திரில்லர் கடந்த காதல் திரைப்படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.

காந்த பார்வையால் விழுங்கும்

காந்த பார்வையால் விழுங்கும்

தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் காதலரா கணவரா என்ற இக்கட்டான சூழ்நிலையில் கதாநாயகி எந்த மாதிரி முடிவை எடுப்பார் என்பதே இப்படத்தின் கதைக்களம்.அமைக்கப்பட்டுள்ளது. தள்ளிப்போகாதே படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெற்று வரும் அனுபமா பரமேஸ்வரன் இப்பொழுது சிவப்பு லைட் வெளிச்சத்தில் காந்த பார்வையால் விழுங்கும் அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அனுபமா இப்பொழுது ரவுடி பாய்ஸ், 18 பேஜஸ், கார்த்திகேயா 2, ஹெலன் உள்ளிட்ட படங்களில் தற்போது கைவசம் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X