அனுபமா பரமேஸ்வரனுக்கு காதல் தோல்வியா?.. விக்ரம் மகனை பிரிகிறாரா?.. அவரே போட்ட எமோஷனல் பதிவு

சென்னை: மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக இருப்பார் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் அவர் கடைசியாக டிராகன், பைசன் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இரண்டு படங்களுமே மெகா ஹிட்டாகியிருந்தன. சூழல் இப்படி இருக்க அவரும், விக்ரம் மகன் துருவ்வும் காதலிப்பதாக தகவல்கள் பரவிய சூழலில்; அனுபமாவின் பதிவு ஒன்று அவர்கள் காதல் பிரேக்கப் ஆகிவிட்டதோ என்ற சந்தேகத்தையும் கிளப்பிவிட்டிருக்கிறது.

பிரேமம் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். அந்தப் படத்தின் வெற்றி சாய் பல்லவிக்கு எப்படி கிரேஸை உருவாக்கியதோ அதேபோல் இவருக்கும் உருவாக்கியது. அதற்கு பிறகு தமிழில் கொடி திரைப்பட்த்தின் மூலம் அறிமுகமானார். அப்படமும் சுமாரான வரவேற்பை பெற்றது. அதேசமயம் அவருக்கான மார்க்கெட் தென்னிந்திய மொழிகளில் ஏறியது. அந்தவகையில் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் அவர் நடிக்க தொடங்கினார்.

Anupama Parameswaran s Cryptic Post Sparks Breakup Rumours With Dhruv Vikram
Photo Credit:

தமிழில் இரண்டு ஹிட்டுகள்: தமிழில் கடைசியாக அவர் டிராகன், பைசன் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இரண்டு படங்களுமே மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின. ஒரு படத்திலும் மாடர்ன் பெண்ணாகவும், டீச்சராகவும், இன்னொரு படத்தில் கிராமத்து பெண்ணாகவும் நடித்து அசத்தியிருந்தார். அவரது நடிப்பும், அழகும் தமிழ் ரசிகர்களை ரொம்பவே ஈர்த்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்ததாகவும் சில கோலிவுட் படங்களில் நடிக்க கமிட்டாகியிருப்பதாகவும் தெரிகிறது.

Also Read
Anbe Diana Day 3 Box Office - அன்பே டயானா மூன்றாவது நாள் வசூல் என்ன?.. பாக்ஸ் ஆஃபிஸ் தப்பியதா?
Anbe Diana Day 3 Box Office - அன்பே டயானா மூன்றாவது நாள் வசூல் என்ன?.. பாக்ஸ் ஆஃபிஸ் தப்பியதா?

துருவ்வுடன் காதல்?: இதற்கிடையே பைசன் படத்தில் நடித்தபோது விக்ரமின் மகன் துருவ்வுடன் ஏற்பட்ட பழக்கம் இரண்டு பேருக்கும் நாளடைவில் காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இரண்டு பேரும் ஒரே இடத்துக்கு சென்ற புகைப்படங்கள் எல்லாம் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகின. விரைவில் அவர்கள் தங்கள் ரிலேஷன்ஷிப் குறித்து பொதுவெளிக்கு அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனுபமாவின் இப்போதைய பதிவை பார்க்கையில் அந்த ரிலேஷன்ஷிப் முறிந்துவிட்டதோ என்ற சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.

Recommended For You
ஜனநாயகன் டிக்கெட் முன்பதிவு தமிழ்நாட்டில் தொடங்கியது.. இனி திருவிழாதான் போங்க
ஜனநாயகன் டிக்கெட் முன்பதிவு தமிழ்நாட்டில் தொடங்கியது.. இனி திருவிழாதான் போங்க

என்ன பதிவு?: அவர் தன் பதிவில், "சில நேரங்களில் உங்கள் அமைதியை நீங்கள் கண்டறிய தேவையற்ற முட்டுக்கட்டைகளை கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. இன்று அந்த அமைதி என்னை தேடி வந்திருக்கிறது. இன்றிலிருந்து நான் என் குரலை தேர்ந்தெடுக்கிறேன். எனது வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிறேன். இனி யாருடைய அனுமதியும் எனக்கு தேவையில்லை. பயமும் இல்லை. எனக்கான பாதையை நோக்கி நானேதான் பயணிக்கிறேன்.

காதலிக்கிறேன்: நான் கிட்டத்தட்ட மறந்தே போன என்னுடைய வாழ்க்கையை மீண்டும் காதலிக்க தொடங்கியிருக்கிறேன். நீண்ட நாட்களாக என்னால் சொல்ல முடியாமல் தவித்த சில விஷயங்களை இப்போதுதான் வெளிப்படுத்துகிறேன். எனக்கு ஆதரவாக நின்ற ரசிகர்களுக்கும், பிரபஞ்சத்துக்கும் நன்றி. இது எனது ஹீலிங்கிற்கான சுதந்திரம் மற்றும் எனக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுப்பதற்கான ஒரு புதிய தொடக்கம்" என குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்தப் பதிவு சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது.

பிரேக்கப் உறுதியா?: முன்னதாக, அனுபமா முதலில் கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவின. அதற்கு பிறகுதான் துருவ் விக்ரமுடன் இணைத்து வைத்து பேசப்பட்டார். இப்போது அவர் கூறியிருப்பது துருவ்வுடனான ரிலேஷன்ஷிப்பையா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. அனுபமாவின் இந்தப் பதிவுக்கு கீழே பலரும் அவருக்கு ஆதரவாக கமெண்ட்ஸ் செய்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X