ஒரு வீடியோவுக்கு 50 ஆயிரம்.. அம்மா அனுராதா இருக்கும் போதே கஷ்டப்பட்டேன்.. அபிநயஸ்ரீ ஓபன் பேட்டி!

சென்னை: விஜய் நடிப்பில் வெளியான பிரெண்ட்ஸ் படத்தில் தேவயாணிக்கு முதலாக விஜய் சைட் அடிக்கும் கேரக்டரில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் தான் அபிநயஸ்ரீ. அவருடைய அம்மா அனுராதா அந்த காலத்தில் இருந்தே படங்களில் ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடி பிரபலமானவர்.

பல படங்களில் அனுராதா மற்றும் அபிநயஸ்ரீ நடித்துள்ள நிலையில், தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டங்கள் மற்றும் சோகங்கள் குறித்து வெளிப்படையாக தற்போது யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளனர்.

Anuradha and Abhinayashree talks about thier cinema career and opens up about adjustments

பிக் பாஸ், யூடியூப், இன்ஸ்டாகிராம் என ஏகப்பட்ட மீடியம் இப்போது சினிமாவில் நுழைய உள்ளது. ஆனால், அந்த காலத்தில் அதெல்லாம் கிடையாது என அனுராதா மற்றும் அபிநயஸ்ரீ பல விஷயங்களை புட்டு புட்டு வைத்துள்ளனர்.

நடிகை அனுராதா: ஒளிப்பதிவாளர் கிருஷ்ண குமாருக்கும் ஹேர் டிரெஸர் சரோஜா தேவிக்கும் மகளாக பிறந்த அனுராதாவை 13 வயதில் இயக்குநர் கே.ஜி. ஜார்ஜ் பார்த்து விட்டு பொண்ணு நல்லா இருக்கா நம்ம படத்துல ஹீரோயினா நடிக்கட்டும் என சொல்ல அவரது பெற்றோர்கள் நடிக்க வைத்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடி பிரபலமானவர் அனுராதா.

நடிகை அபிநயஸ்ரீ: அம்மாவை தொடர்ந்து அவரது மகள் அபிநயஸ்ரீ விஜய், சூர்யா நடித்து வெளியான பிரெண்ட்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். சப்தம், 123, பந்தா பரமசிவம், கோவில்பட்டி வீரலட்சுமி, இயற்கை, ஆர்யா, வயசு பசங்க, உணர்ச்சிகள், பாலக்காட்டு மாதவன், இளமை ஊஞ்சல், ஸ்ட்ரைக்கர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா, போஜ்புரி என பல்வேறு மொழிகளில் இவரும் நடித்துள்ளார்.

பிக் பாஸ் பிரபலம்: பிக் பாஸ் தெலுங்கு சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். சினிமாவில் அம்மா அத்தனை படங்களில் நடித்தாலும் இவருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சாதாரண கதாபாத்திரங்கள் மட்டும் கவர்ச்சி நடிகையாகவே அபிநயஸ்ரீயும் பல படங்களில் நடித்துள்ளார்.

ஒரு வீடியோவுக்கு 50 ஆயிரம்: அந்த காலத்தில் ரீல் வேஸ்ட் ஆகக் கூடாதுன்னு சொல்லி படம் எடுப்பாங்க, ஒரு பட வாய்ப்பு கிடைப்பதே அபூர்வமாக இருக்கும். ஆனால், இந்த காலத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு ரீல்ஸ் வீடியோ போட்டே சில இன்ஃப்ளூயன்ஸர்கள் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் என அசால்ட்டாக சம்பாதித்து வருகின்றனர் என அம்மாவும் மகளும் கூறியுள்ளனர்.

அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை: சினிமாவில் அது இருக்கத்தான் செய்கிறது. ஆனால், நமக்கு பிடிக்கவில்லை என சொல்லிவிட்டால் யாரும் கட்டாயப்படுத்த மாட்டார்கள். நோ மீன்ஸ் நோ கதை தான். சில நடிகைகள் ஆரம்பத்தில் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து கொண்டு பட வாய்ப்புகளை பிடிப்பதும் அதன் பின்னர் அது வேண்டாம் என ஒதுங்கும் போது தான் அவர்களுக்கு சிக்கல் வருகிறது என்றும் அபிநயஸ்ரீ ஷாக் கொடுக்கிறார். எல்லா துறையிலும் இந்த பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. நமக்கு அது தேவையா? இல்லையா? என நாம் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X