பிறந்த நாளில் புதுப்பட அறிவிப்பு வெளியிட்ட அனுஷ்கா...டைரக்டர் யாரு தெரியுமா ?
ஐதராபாத் : தென்னிந்திய சினிமாவின் டாப் ஹீரோன்களில் ஒருவரான அனுஷ்கா ஷெட்டி, இன்று தனது 40 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அருந்ததி, பாகுபலி என தொடர்ந்து பல படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார் அனுஷ்கா.
பாகுபலி 2 படத்தில் இவரின் அழகிய தோற்றம், ஹுரோக்களுக்கு இணையாக இஞ்சி இடுப்பழகி படத்திற்காக பல மடங்கு உடல் எடையை கூட்டி, பிறகு மீண்டும் ஸ்லிம் தோற்றத்திற்கு மாறி உள்ளது என அனைவரையும் கவர்ந்துள்ளார் அனுஷ்கா. இதனால் இவருக்கு ரசிகர்கள் அதிகம்.
இந்நிலையில் தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அனுஷ்கா. அனுஷ்கா 48 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை டைரக்டர் மகேஷ் பாபு.பி இயக்க உள்ளார். இதை அழகிய வீடியோவாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
உங்கள் அனைவரின் வாழ்த்துக்கள் மற்றும் அன்பிற்கு நன்றி. எனது பிறந்த நாளில் எனது அடுத்த படத்தின் அறிவிப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. டைரக்டர் மகேஷ்பாபு.பி இயக்கும் இந்த படத்தை யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்க உள்ளது. இப்போதும் எப்போதும் சந்தோஷமாக இருங்கள் என கேப்ஷன் பதிவிட்டுள்ளார் அனுஷ்கா.

இந்த படத்தின் ஹீரோ உள்ளிட்ட படக்குழு பற்றிய விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஹீரோக்கள் பிறந்தநாளில் புதிய பட அறிவிப்புக்களை வெளியிடுவார்கள். அதோடு ஹீரோயின் யார் என்பதை சொல்ல சஸ்பென்ஸ் வைப்பார்கள். ஆனால் வித்தியாசமாக அனுஷ்கா பிறந்தநாளில், அதுவும் டைரக்டர், ஹீரோயின் பற்றிய விபரத்தை மட்டும் வெளியிட்டுள்ளனர்.
இதனால் அனுஷ்கா அடுத்து நடிக்க போகும் படமும் ஹீரோயினை மையப்படுத்தும் கதையாக தான் இருக்கக் கூடும் என கூறப்படுகிறது. அதுவரை அனுஷ்கா நடித்த நாயகிகளை மையமாகக் கொண்ட கதைகளைக் கொண்ட மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. அருந்ததி, ருத்ரமாதேவி உள்ளிட்ட பல படங்கள் அனுஷ்காவிற்கு மிகப் பெரிய பிரேக் கொடுத்துள்ளன.
அதனால் இந்த படமும் நாயகியை மையமாகக் கொண்ட, வரலாற்று கதை படமாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











