மோடி அப்படி செய்யச் சொன்னா, அனுஷ்கா இப்படி செய்துவிட்டாரே
சென்னை: இஞ்சி இடுப்பழகி படத்திற்காக யோகா குருவான அனுஷ்கா யோகா செய்வதை நிறுத்தி வைத்துள்ளார்.
அனுஷ்கா யோகா குருவாக இருக்கையில் தான் திரையுலகினர் கண்ணில்பட்டு நடிகையானார். அவர் தினமும் யோகா செய்வதுடன் சக நடிகர், நடிகைகளுக்கும் யோகாசனங்களை கற்றுக் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் அனுஷ்கா யோகா செய்வதை நிறுத்தி வைத்துள்ளார்.

மோடி
சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. தினமும் யோகா செய்யுங்கள் அது உடலுக்கும், மனதிற்கும் நல்லது என்று பிரதமர் நரேந்திர மோடி நேரம் கிடைக்கும்போது எல்லாம் மக்களை வலியுறுத்தி வருகிறார்.

அனுஷ்கா
மோடி அனைவரையும் யோகா செய்யுமாறு வலியுறுத்தி வரும் நேரத்தில் அனுஷ்கா யோகாவை கைவிட்டுள்ளார். அவர் யோகா செய்யாமல் இருப்பதற்கு காரணம் உள்ளது.

இஞ்சி இடுப்பழகி
இஞ்சி இடுப்பழகி படத்தில் அனுஷ்கா குண்டு பெண்ணாகவும், ஒல்லிக்குச்சியாகவும் வருகிறார். முதலில் குண்டுபெண் அனுஷ்காவின் கதாபாத்திரத்தை படமாக்கி வருகின்றனர். இந்த படத்திற்காகத் தான் அனுஷ்கா யோகா செய்வதை நிறுத்தி வைத்துள்ளார்.

சாப்பாடு
உடல் எடையை அதிகரிக்க அனுஷ்கா டயட், யோகாவை மறந்து கண்டமேனிக்கு சாப்பிட்டார். விளைவு குண்டாக ஆகிவிட்டார். குண்டு அனுஷ்காவை பார்த்த ரசிகர்களே ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.

ஒல்லி
குண்டு கதாபாத்திரத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டதும் ஜிம்முக்கு சென்றும், யோகா செய்தும், உணவு கட்டுப்பாட்டை மேற்கொண்டும் அனுஷ்கா ஒல்லிக்குச்சியாக மாற உள்ளார்.


Click it and Unblock the Notifications











