'முதல்வர்' மகேஷ் பாபுவுக்காக குத்தாட்டம் போடும் அனுஷ்கா?
ஹைதராபாத்: மகேஷ் பாபுவின் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட உள்ளாராம் அனுஷ்கா.
கோலிவுட் மற்றும் டோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார் அனுஷ்கா. அவருக்கு வெயிட் போட்டு ஆன்ட்டி மாதிரி ஆகிவிட்டார் என்று தமிழ் ரசிகர்கள் கிண்டல் செய்தனர்.
இந்த காரணத்தால் அவர் தமிழ் படங்களில் நடிக்க தற்போது யோசிக்கிறார்.

தெலுங்கு
அனுஷ்கா குண்டாக இருப்பது டோலிவுட் ரசிகர்களுக்கு குறையாக தெரியவில்லை. அதனால் அவரும் தெலுங்கு படங்களில் சந்தோஷமாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகேஷ்பாபு
முருகதாஸ் இயக்கத்தில் ஸ்பைடர் படத்தில் நடித்து வருகிறார் மகேஷ் பாபு. இந்த படத்தை முடித்த பிறகு அவர் பாரத் எனே நேனு என்னும் அரசியல் படத்தில் நடிக்க உள்ளார்.

அனுஷ்கா
பாரத் எனே நேனு படத்தில் மகேஷ்பாபு முதல்வராக நடிக்கிறாராம். இந்த படத்தில் அனுஷ்கா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

பாடல்
அனுஷ்கா குத்தாட்டம் போடுவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அவர் ஓகே சொல்லியதும் பாடல் காட்சியை படமாக்க உள்ளார்கள் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











