»   »  சல்மான் கானுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை அனுஷ்காவுக்கும்!

சல்மான் கானுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை அனுஷ்காவுக்கும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு வந்த அதே பிரச்சனை அனுஷ்காவுக்கும் ஏற்பட்டது.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் ரோமானியாவை சேர்ந்த நடிகை லூலியா வந்தூரை காதலித்து வருகிறார். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று கூறப்படுகிறது.

சல்மானை விரைவில் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாராம் லூலியா.

கத்ரீனா கைஃப்

கத்ரீனா கைஃப்

காதலர் ரன்பிர் கபூரை பிரிந்த கத்ரீனா கைஃப் மீது சல்மான் பாசமாக உள்ளாராம். கத்ரீனாவுக்கு பெரிய படடங்களில் வாய்ப்பு கிடைக்க சிபாரிசு செய்து வருகிறாராம் சல்மான்.

சல்மான்

சல்மான்

தனது காதல் உள்ளிட்ட தனிப்பட்ட விஷயங்கள் குறித்து மீடியாவுக்கு அவ்வப்போது எப்படி செய்தி போகிறது என்று சல்மானுக்கு சந்தேகம் ஏற்பட்டது. செய்தியை மீடியாவுக்கு கொடுத்தது தன்னுடைய பாடிகார்டுகள் தான் என்று தெரிந்து அவர்களை பணிநீக்கம் செய்தார்.

அனுஷ்கா

அனுஷ்கா

அனுஷ்காவின் பெயர் அண்மை காலமாக பிரபாஸ் பெயருடன் சேர்ந்து அடிபடுகிறது. அனுஷ்கா பிரபாஸை திருமணம் செய்து கொள்ள ஆவலாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

டிஸ்மிஸ்

டிஸ்மிஸ்

தன்னுடைய உதவியாளர்களில் ஒருவர் தான் தன்னைப் பற்றிய சில பெர்சனல் விஷயங்களை வெளியே சொல்வதை கண்டுபிடித்து அவரை டிஸ்மிஸ் செய்துள்ளார் அனுஷ்கா. சல்மானுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனையை அவர் பாணியில் கையாண்டுள்ளார் அனுஷ்கா.

English summary
Anushka Shetty has faced the problem as Bollywood Sultan Salman Khan and she took a step just like him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil