மகாபலிக்காக அனுஷ்கா போட்ட மெகா சண்டை!
எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் மகாபலி எனும் பிரமாண்ட படத்துக்காக 2000 துணை நடிகர்களுடன் சண்டை போட்டு அசத்தியுள்ளார் நடிகை அனுஷ்கா.
ஈகா (நான் ஈ) படத்துக்குப் பிறது எஸ் எஸ் ராஜமவுலி இயக்கும் படம் பாஹூபலி. இந்தப் படத்தின் தமிழ் பதிப்புக்கு மகாபலி எனப் பெயரிட்டுள்ளார்கள்.
மொழிமாற்றுப் படம் என்றாலும், அது தெரியாத அளவுக்கு நேரடி தமிழ்ப் படம் மாதிரி இந்தப் படத்தை உருவாக்கி வருகிறார் ராஜமவுலி.

சத்யராஜ்
இந்த படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சரித்திர கதையை பின்னணியாகக் கொண்டு இப்படம் உருவாகி வருகிறது.

பிரமாண்டம்
இதுவரை இந்தியாவில் இப்படி ஒரு படம் வந்ததில்லை என வியக்கும் அளவுக்கு இப் படத்திற்காக பிரம்மாண்ட அரங்குகள், வியக்க வைக்கும் கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்கி வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியாகி படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனுஷ்கா
இந்நிலையில், இந்த படத்தில் நடக்கும் போர் காட்சிக்காக 2000 துணை நடிகர்களை வைத்து படமாக்கி வருகிறார் இயக்குநர் ராஜமவுலி. இவர்களோடு அனுஷ்கா போரிடுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சண்டைக்காக கிட்டத்தட்ட 6 மாத காலம் அனைவருக்கும் பயிற்சி தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2015-ல்
2015-ம் ஆண்டு தெலுங்கு, தமிழில் வெளியாகும் முதல் மெகா பிரமாண்டப் படம் என்ற அறிவிப்போடு வரவிருக்கிறது மகாபலி எனும் பாஹூபலி.


Click it and Unblock the Notifications











