ருத்ரம்மா தேவி கோவிலில் அனுஷ்கா செய்த பரிகார பூஜை
ஹைதராபாத்: ருத்ரம்மா தேவி படப்பிடிப்பில் நகைகள் காணாமல் போனதால் நடிகை அனுஷ்கா இதற்காக சிறப்பு பரிகார பூஜைகள் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பூசாரி ஒருவர் அனுஷ்காவை நீயே ருத்ரம்மா தேவி என்று கூறி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
இதனால் அவரசம் அவசரமாக கோவிலுக்குப் போய் பரிகாரம் செய்துள்ளாரம்.
ருத்ரம்மாதேவியாக நடித்துக் கொண்டிருக்கும் அனுஷ்கா அணிந்து கொள்வதற்காக சென்னையின் பிரபல நகைக்கடையிலிருந்து 500 பவுன்களில் செய்யப்பட்ட ஒரிஜினல் தங்க நகைகளை வரவழைத்தார்கள்.

கவரிங் போட்டா அலர்ஜி
பொதுவாக இதுபோன்ற காட்சிகளில் கவரிங் நகைகளைதான் பயன்படுத்துவார்கள். ஆனால் அப்படி அணிந்தால் ஸ்கின் அலர்ஜி வரும் என்று அனுஷ்கா கவலைப்பட்டதால்தான் அசல் தங்க நகைகளை கொண்டு வந்தனர்.

மாயமான நகைகள்
படப்பிடிப்புக்கு வந்த இடத்தில் 100 பவுன் நகைகள் வரை மாயமானது. நகைகள் காணாமல் போன சம்பவம் ஆந்திரா பட உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

100 பவுன் நகைகள்
500 பவுனும் போச்சு என்று எல்லாரும் கூப்பாடு போட இல்லையில்லை. போனது வெறும் 100 தான். இருந்தாலும் தேடிக் கொண்டிருக்கிறோம் என்ற தன்னிலை விளக்கம் அளித்தது ருத்ரம்மாதேவி பட நிர்வாகம்.

நீயே ருத்ரம்மா தேவி
இதற்கிடையில் நகைகளை அணிந்து நடிக்கும் நீயே ருத்ரம்மாதேவி. உன் கழுத்தில் அணிந்த நகைகள் காணாமல் போனால், அது அந்த அம்மனின் நகையே காணாமல் போனதற்கு சமம் என்றாராம் பூசாரி ஒருவர்.

பரிகர பூஜை
இதனால் பதறிய அனுஷ்காவிடம், அந்த ருத்ரம்மா தேவி ஆலயத்திற்கே வந்து பரிகார பூஜை செய் என்றாராம் பூசாரி. உடனே கிளம்பி கோதாவரி ஆற்று கரையோரம் இருக்கும் கோவிலுக்கு போய் பரிகார பூஜைகளை செய்துவிட்டு திரும்பினாராம் அனுஷ்கா.


Click it and Unblock the Notifications











