"என்னா ஒரு அர்ப்பணிப்பு அனுஷ்காகாரு".... டைரக்டரின் புகழாரம்!
ஹைதராபாத்: ருத்ரமாதேவி படப்பிடிப்பில் சண்டைக் காட்சி ஒன்றில் நடித்த போது நடிகை அனுஷ்கா காயமடைந்துள்ளார். ஆனாலும் விடாமல் அவர் நடித்ததைப் பார்த்து யூனிட்டே அசந்து போய் விட்டதாம்.
குணசேகரன் இயக்கத்தில் அனுஷ்கா நடித்து வரும் படம் ருத்ரமாதேவி. வருடக்கணக்கில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
சரித்திரப் பின்னணி கொண்ட இப்படத்தில் ராணியாக வருகிறார் அனுஷ்கா. இப்படத்தில் அவர் குதிரையேற்றம், வாள் சண்டை என ஆக்ஷன் காட்சிகளில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், படப்பிடிப்பின் போது எதிர்பாராத விதமாக அனுஷ்காவிற்கு காயம் உண்டானது. ஆனால், காயத்தைப் பொருட்படுத்தாமல் தன்னுடைய காட்சியை நடித்துக் கொடுத்துள்ளார் அனுஷ்கா.

அனுஷ்காகாரு...
இது தொடர்பாக இப்படத்தின் இயக்குநர் குணசேகரன் தனது பேஸ்புக் பக்கத்தில், ‘அனுஷ்காகாரு, எங்கள் ருத்ரமாதேவியின் அபாரமான நடிப்பு மற்றும் அர்ப்பணிப்பைக் கண்டு நாங்கள் அனைவருமே ஆச்சர்யமடைந்தனர்.

அன்பான அனுஷ்கா...
படப்பிடிப்பில் இருந்த ஆட்கள் அனைவரிடமும் அவர் புன்னகையுடன், அன்பாகவே பேசிப் பழகினார். கையில் காயம் ஏற்பட்ட போது கூட அவர் கோபமடையவில்லை'எனத் தெரிவித்துள்ளார்.

எதிர்பார்ப்பு...
அனுஷ்கா மற்றும் குணசேகரனின் திரை உலக வாழ்க்கையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இப்படம் என்றால் அது மிகையில்லை.

நாங்களும் ரெடி...
வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் அனுஷ்காவும், அல்லு அர்ஜூனும் ரசிகர்களை கவரும் வகையில் மிகவும் கம்பீரமாக போஸ் கொடுத்துள்ளனர். இப்படம் வரும் டிசம்பர் 19ம் தேதி ரிலீசாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
தாண்டவத்தை தரிசிக்க நாங்களும் ரெடி குணசேகர்காரு...!


Click it and Unblock the Notifications











