கௌதம் மேனன் படத்தில் அஜீத்தின் ஜோடி யார் தெரியுமா?

By Siva

சென்னை: கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கவிருக்கிறாராம்.

கடந்த 10ம் தேதி ரிலீஸான அஜீத்தின் வீரம் படம் இந்தியா தவிர வெளிநாடுகளிலும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கும் படம் என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் மற்றும் கேரளாவில் வீரம் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை பார்த்து கூடுதல் தியேட்டர்களில் படம் திரையிடப்பட்டுள்ளது.

2 ஹிட்

2 ஹிட்

ஆரம்பம் என்ற ஹிட் படத்தை தொடர்ந்து அஜீத் கொடுத்துள்ள அடுத்த சூப்பர் ஹிட் படம் வீரம். தொடர்ந்து இரண்டு ஹிட் படங்கள் கொடுத்துள்ள அஜீத் அடுத்த படத்தில் நடிக்க தயாராகிவிட்டார்.

கௌதம் மேனன்

கௌதம் மேனன்

அஜீத் கௌதம் மேனனன் இயக்கத்தில் அடுத்ததாக நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது.

ஹீரோயின்

ஹீரோயின்

அஜீத்துக்கு கௌதம் யாரை ஹீரோயினாக போடப்போகிறார் என்று அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். மாடல் ஒருவர் அஜீத் ஜோடியாக நடிக்கலாம் என்று கூறப்பட்டது.

அனுஷ்கா

அனுஷ்கா

இறுதியில் அஜீத் ஜோடியாக நடிக்கவிருப்பவர் அனுஷ்கா என்று கூறப்படுகிறது. படத்தில் நடிக்க அனுஷ்கா சம்மதம் தெரிவித்துவிட்டாராம். அவர் அஜீத்துடன் ஜோடி சேர்வது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

டேட்ஸ்

டேட்ஸ்

அனுஷ்கா தெலுங்கில் பாகுபலி மற்றும் ருத்ரமாதேவி ஆகிய 2 பெரிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே அஜீத் படத்திற்கும் அவர் அட்ஜஸ்ட் செய்து டேட்ஸ் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X