அஜித் எப்பவோ செய்ததை இப்போ செய்யும் அனுஷ்கா: நடக்கட்டும் நடக்கட்டும்
சென்னை: அஜித் 20 ஆண்டுகளுக்கு முன்பு செய்ததை அனுஷ்கா தற்போது செய்கிறார்.
மகன் ராம் சரண் தேஜா தயாரிப்பில் சிரஞ்சீவி நடித்து வரும் வரலாற்று படம் சயீரா நரசிம்ம ரெட்டி. அந்த படத்தில் அனுஷ்கா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் அந்த பட செட்டில் அனுஷ்கா காயம் அடைந்ததாகவும், இரண்டு வாரங்கள் ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுரை வழங்கியதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இது குறித்த உண்மை தெரிய வந்துள்ளது. தான் காயம் அடைந்ததாக அனைவரும் பேசியது அனுஷ்காவுக்கு தெரிய வரவே அவர் இன்ஸ்டாகிராமில் விளக்கம் அளித்துள்ளார்.
நான் நலமுடன், சந்தோஷமாக சியாட்டிலில் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளேன் என்று அனுஷ்கா இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
அவரின் போஸ்ட்டை பார்த்தால் அனுஷ்காவுக்கு பெரிதாக எதுவும் காயம் ஏற்படவில்லை. சும்மா லேசாக ஏதோ நடந்ததை பெரிதுபடுத்தியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.
அனுஷ்கா தற்போது சியாட்டிலில் மாதவனின் சைலன்ஸ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் அஞ்சலி, அர்ஜுன் ரெட்டி படம் புகழ் ஷாலினி பாண்டே, ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சென் ஆகியோரும் உள்ளனர்.
சைலன்ஸ் படத்தில் அனுஷ்கா வெளிநாடு வாழ் தொழில் அதிபராக நடிக்கிறாராம். அதுவும் காது கேளாத, வாய் பேச முடியாத தொழில் அதிபராக நடிக்கிறாராம். அஞ்சலி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
20 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் வெளியான வாலி படத்தில் ஒரு அஜித் வாய் பேச முடியாத, காது கேளாத தொழில் அதிபராக நடித்திருப்பார். இந்நிலையில் அனுஷ்காவும் அதே கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
உடல் எடையை குறைக்க அனுஷ்கா நடிப்பில் இருந்து ஒரு குட்டி பிரேக் எடுத்தார். இந்நிலையில் மீண்டும நடிப்பை துவங்கியுள்ளார். அனுஷ்கா ஏற்கனவே மாதவனுடன் சேர்ந்து ரெண்டு படத்தில் நடித்துள்ளார். சுந்தர் சி. இயக்கிய ரெண்டு படம் மூலம் தான் அனுஷ்கா கோலிவுட்டில் அறிமுகமானார். இந்நிலையில் அவர் மீண்டும் மாதவனுடன் சேர்ந்து நடிக்கிறார்.
அனுஷ்காவுக்கு கோலிவுட்டில் பெயர் வாங்கிக் கொடுத்த முதல் படம் சூர்யாவின் சிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











