அனுஷ்கா, நயன், சமந்தா, காஜல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

By Siva

சென்னை: நடிகைகளில் அனுஷ்கா தான் அதிகபட்சமாக ரூ.2.5 கோடி சம்பளம் வாங்குகிறார்.

கோலிவுட் ஹீரோயின்களில் அதிகம் சம்பளம் வாங்குபவராக இத்தனை நாட்களாக இருந்தவர் நயன்தாரா. ஆனால் தற்போது அனுஷ்கா நயன்தாராவை பின்னுக்கு தள்ளிவிட்டார்.

இந்த ஆண்டு நடிகைகளில் யார், யார் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்ற விவரம் வருமாறு,

அனுஷ்கா

அனுஷ்கா

அனுஷ்கா ஒரு படத்திற்கு ரூ.2 கோடி முதல் ரூ.2.5 கோடி வரை பெறுகிறார். அவர் தெலுங்கு படமான ருத்ரம்மா தேவியில் நடிக்க ரூ.2.5 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.

நயன்தாரா

நயன்தாரா

நயன்தாரா படம் ஒன்றுக்கு ரூ.1.5 கோடி சம்பளம் வாங்குகிறாராம். அவர் தற்போது இது நம்ம ஆளு, நண்பேன்டா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் கை நிறைய படங்கள் வைத்துள்ள அவர் தனது சம்பளத்தை விரைவில் ரூ.2 கோடியாக உயர்த்தலாம் என்று கூறப்படுகிறது.

சமந்தா

சமந்தா

தெலுங்கில் முன்னணி நாயகியான சமந்தா படம் ஒன்றுக்கு ரூ1.5 கோடியில் இருந்து ரூ.2 கோடி வரை கேட்கிறாராம். தெலுங்கு படமான அல்லுடு சீனுவில் நடிக்க அவர் ரூ.2 கோடி சம்பளம் கேட்டிருக்கிறாராம்.

காஜல்

காஜல்

காஜல் அகர்வால் ஒரு படத்தில் நடிக்க ரூ.1.5 கோடி சம்பளம் வாங்குகிறார். அவர் கையில் தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் படங்கள் உள்ளன.

ஸ்ருதி

ஸ்ருதி

விஷால் ஜோடியாக பூஜை படத்தில் நடித்து வரும் ஸ்ருதி படம் ஒன்றுக்கு ரூ.1 கோடி சம்பளம் வாங்குகிறார்.

ஹன்சிகா

ஹன்சிகா

ஹன்சிகா படத்திற்கு ரூ.75 லட்சம் வாங்குகிறார். அவர் கையில் 7 தமிழ் படங்கள் உள்ளன.

தமன்னா

தமன்னா

தமன்னா தெலுங்கு படங்களில் நடிக்க ரூ.1 கோடி வாங்குகிறாராம். த்ரிஷா ஒரு படத்தில் நடிக்க ரூ.1 கோடி வாங்குகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X