48வது படத்திற்காக புதுமுக இயக்குநருடன் கைகோர்க்கும் அனுஷ்கா!
ஐதராபாத் : நடிகை அனுஷ்கா தென்னிந்திய மொழிப் படங்களில் பிசியாக காணப்பட்டவர்.
தமிழில் விஜய், சூர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர்.
தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில் தனது 48வது படத்திற்காக புதுமுக இயக்குநருடன் கைகோர்த்துள்ளார்.

நடிகை அனுஷ்கா
நடிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் பிசியான நடிகையாக வலம் வந்தவர். நடிகர் நாகார்ஜுனாவுடன் இணைந்து சூப்பர் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதேபோல தமிழில் மாதவனுடன் ரெண்டு என்ற படத்தில் அறிமுகமானார்.

வெற்றி நாயகி
தொடர்ந்து தமிழ், தெலுங்கில் பிரபல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி உள்ளிட்டவர்களுடன் நடித்துள்ளார். இவை வெற்றிப்படங்களாக அமைந்தன. தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வெற்றி நாயகியாக வலம் வந்தார்.

வெற்றிப் படங்கள்
இவரது நடிப்பில் தெலுங்கில் உருவான பாகமதி, பாகுபலி 1 மற்றும் 2 ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய படங்களாக உள்ளன. சிறப்பான யோகா ஆசிரியையாகவும் இருந்துள்ளார் அனுஷ்கா. மும்பையில் யோகா ஆசிரியர் பரத் தாகூரிடம் இவர் யோகா பயின்றுள்ளார்.

40வது பிறந்தநாள்
சமீபத்தில் தன்னுடைய 40வது பிறந்தநாளை கொண்டாடினார் அனுஷ்கா. கடந்த ஆண்டில் இவரது நடிப்பில் வெளியான நிசப்தம் படம் ஓடிடியில் ரிலீசானது. கொரோனா ஊரடங்கின்போது வெளியான இந்தப் படம் சரியான வரவேற்பை பெறவில்லை. அதையடுத்து அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை.

48வது படம்
இந்நிலையில் தற்போது தனது 48வது படத்திற்காக மகேஷ்பாபு என்ற புதுமுக இயக்குநருடன் கைகோர்த்துள்ளார் அனுஷ்கா. நான்கு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை யூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. பிரபாசின் சாஹோ, ராதே ஷ்யாம் ஆகிய பிரம்மாண்டமான படங்களை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது.
Recommended Video

பாகமதி வெற்றிப் படம்
மேலும் அனுஷ்காவின் பாகமதி திரைப்படத்தை 4 மொழிகளில் இந்நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இந்தப் படம் சிறப்பான வெற்றியையும் அதிக வசூல் மழையையும் பொழிந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து படவாய்ப்புகள் இன்றியுள்ள அனுஷ்காவிற்கு இந்தப் படம் கைக்கொடுக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











