Don't Miss!
- News
மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தலைமை நீதிபதி யோசனைக்கு பிரதமர் மோடி வரவேற்பு
- Automobiles
கார்களுக்கு பதிலா இந்த ஆட்டோக்களையே வாங்கிடலாம் போல... விலையோ கம்மி, வசதியோ மிக அதிகம்!
- Lifestyle
Today Rasi Palan 23 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் பண பிரச்சனை நீங்கிடும்...
- Sports
U-19 மகளிர் உலக கோப்பை- 59 ரன்களில் சுருண்ட இலங்கை.. இந்திய அணி அபார வெற்றி
- Finance
Budget 2023:பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் 5 முக்கிய அறிவிப்புகள்..!
- Technology
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
என்னடா இது? அப்ப நிஜமாவே பிரபாஸ் இல்லையா? கிரிக்கெட் வீரரை கல்யாணம் பண்ணப் போறாராமே அனுஷ்கா?
சென்னை: நடிகை அனுஷ்கா ஷெட்டி, கிரிக்கெட் வீரர் ஒருவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக பரபரப்பு செய்திகள் வெளியாகி உள்ளன.
தமிழ், தெலுங்கில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார் அனுஷ்கா. இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடித்துவருகிறார்.
ஹீரோவுக்கு இணையாக, படத்தைத் தாங்கி செல்லும் ஹீரோயின்களில் இவரும் ஒருவர்.
ரம்யா பிடித்த இடுப்பை.. கையில் எடுத்த சஞ்சிதா.. கலகலக்கும் கவர்ச்சிப் படங்கள்!

ஹீரோவுடன் காதல்
இவர், ஆர்யா, பிரகாஷ் ராஜ் நடித்த இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை கூட்டினார். பிறகு உடல் எடை குறையவில்லை. இதனால், அதைக் குறைக்க அமெரிக்கா சென்றுவந்ததாகக் கூறப்பட்டது. இவரும் பிரபல தெலுங்கு ஹீரோ பிரபாஸூம் காதலித்து வருவதாக கடந்த சில வருடங்களாக செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இருவரும் அதை மறுத்து வருகின்றனர்.

அனுஷ்கா வயது 38
நாங்கள் நண்பர்கள்தான், எங்களுக்குள் வேறு எதுவும் இல்லை என்று கூறுகின்றனர். இருந்தாலும் அவர்கள் பற்றிய கிசு கிசு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நடிகை அனுஷ்காவுக்கு இப்போது வயது 38. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன், குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.

கிரிக்கெட் வீரர்
இதனால் அவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகச் செய்திகள் வந்தன. அவருக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும் கூறப்பட்டது. பின்னர் அதுபற்றி பேச்சு எழவில்லை. இந்நிலையில், அவர் கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. வட இந்திய கிரிக்கெட் வீரரான அவர், தென்னிந்திய அணி ஒன்றுக்காக ரஞ்சி போட்டிகளில் விளையாடி வருகிறார் என்று கூறப்படுகிறது.

விரைவில் திருமணம்
அவரைதான் கடந்த சில வருடங்களாக அனுஷ்கா காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தெலுங்கு சினிமா உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால், இதுபற்றி அதிகாரபூர்வ தகவல் ஏதுமில்லை. அந்த கிரிக்கெட் வீரர் யாராக இருக்கும் என்று தலையை பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள், அனுஷ்கா ரசிகர்கள்.