அடடா... ஆர்யாவோட பிரியாணியை சாப்பிடும் வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேனே!- இது அனுஷ்கா

By Shankar

கோலிவுட், டோலிவுட் ஹீரோயின்களெல்லாம் மிஸ் பண்ணாமல் சாப்பிட்ட ஆர்யா வீட்டு பிரியாணியை தான் மட்டும் மிஸ் பண்ணிவிட்டதாக வருத்தப்பட்டார் நடிகை அனுஷ்கா.

செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா-அனுஷ்கா ஜோடியாக நடித்துள்ள 'இரண்டாம் உலகம்' படம் வரும் நவம்பர் 22-ம் தேதி திரைக்கு வருகிறது.

இதையொட்டி ஆர்யா, அனுஷ்கா, செல்வராகவன் ஆகிய மூன்று பேரும் சென்னையில் நேற்று நிருபர்களைச் சந்தித்தனர்.

அப்போது அனுஷ்காவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் சொன்ன பதில்களும்...

ஆர்யா வீட்டு பிரியாணி

ஆர்யா வீட்டு பிரியாணி

கேள்வி: ஆர்யா வீட்டு பிரியாணியை பெரும்பாலான தமிழ் - தெலுங்கு பட கதாநாயகிகள் அத்தனை பேரும் சாப்பிட்டு விட்டதாக சொல்கிறார்கள். நீங்களும் ருசி பார்த்திருக்கீங்களா..?

பதில்: நான் அந்த வாய்ப்பை தவற விட்டுட்டேன். ஆர்யா வீட்டு பிரியாணி பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால், இன்னும் சாப்பிடவில்லை. போன ரம்ஜான் பண்டிகையின்போது நான் சென்னையில் இல்லை.

ஆக்ஷன் நாயகியா?

ஆக்ஷன் நாயகியா?

கேள்வி- ‘இரண்டாம் உலகம்' படத்தில், ஆக்ஷன் நாயகியாக மாறி சண்டையெல்லாம் போட்டிருக்கிறீர்களாமே?

பதில்: வெறும் சண்டை மட்டுமே போடவில்லை. சண்டையும் போட்டு இருக்கிறேன். ‘இரண்டாம் உலகம்' படத்தில் நடித்ததை நான் பெருமையாக கருதுகிறேன். இதுபோன்ற கதையும், கதாபாத்திரமும் எல்லா கதாநாயகிகளுக்கும் கிடைக்காது.

கதை நல்லாருந்தா சரி...

கதை நல்லாருந்தா சரி...

கேள்வி: தெலுங்கில் ருத்ரம்மா போல ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடிக்காதது ஏன்?

பதில்: நான் கதைதான் முக்கியம் என்று நினைக்கிறேன். என்னை சுற்றி மட்டுமே கதை இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. கதாநாயகனைவிட, எனக்கு அதிக முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று கூறுவதில்லை. தெலுங்கில் அப்படி வாய்ப்புகள் வந்ததால் நடித்தேன். அதேபோல் தமிழிலும் பட வாய்ப்புகள் வந்தால், நடிப்பேன்.

ஆர்யா வெரி நைஸ்

ஆர்யா வெரி நைஸ்

கேள்வி: ஆர்யாவை எல்லா கதாநாயகிகளுக்கும் பிடித்தமானவராக இருக்கிறாரே... எப்படி?

பதில்: அது உண்மைதான். ஆர்யா, அனைவருடனும் நட்புடன் பழகுபவர். அவருடன் நடிக்கும்போது எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவருடன் நடிக்கும்போது மிகவும் வசதியாக இருப்பதாக உணர்ந்தேன். ஆர்யா, வெரி ‘நைஸ்' ஹீரோ!

யாருக்கு முதல் திருமணம்

யாருக்கு முதல் திருமணம்

கேள்வி: ஆர்யாவும், நீங்களும் திருமண வயதில் இருக்கிறீர்கள். இரண்டு பேரில் யாருக்கு முதலில் திருமணம் நடக்கும்?

பதில்: தெரியாது. ஆர்யாவுக்கு திருமணம் எப்போது என்று அவருக்குத்தான் தெரியும். நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற அவசரம் எதுவும் இல்லை.

காதல் திருமணமா?

காதல் திருமணமா?

கேள்வி: உங்கள் திருமணம் காதல் திருமணமாக இருக்குமா, பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்படும் திருமணமாக இருக்குமா?

பதில்: அதுபற்றி யோசிக்கவில்லை.

கேள்வி: உங்கள் வருங்கால கணவர் உங்களை விட உயரமானவராக இருக்க வேண்டுமா, குள்ளமானவராக இருக்க வேண்டுமா?

பதில்: அப்படியெல்லாம் யோசித்தால், திருமணமே நடக்காது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X