அட செம மாஸ்.. அனுஷ்கா நடிக்கவிருக்கும் புதிய படம் தெரியுமா?.. தமிழ் நடிகரும் இருக்கார்

ஹைதராபாத்: தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் அனுஷ்கா. அழகும், திறமையும் ஒருசேர கொண்ட அவர் பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலம் அடைந்தார். தேவசேனா என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அவர் திடீரென சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். அதனையடுத்து மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த அவர் தற்போது காதி என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இது தவிர்த்து மலையாள படம் ஒன்றிலும் நடிக்கிறார் அவர்.

தெலுங்கில் 2005ஆம் ஆண்டு சூப்பர் படத்தில் அறிமுகமான அனுஷ்கா அருந்ததி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். பேய் படமான அருந்ததியில் அனுஷ்காவின் நடிப்பு பட்டையை கிளப்பியது. அதுமட்டுமின்றி ஹீரோவுக்கு சமமான ரெஸ்பான்ஸும் கிடைத்தது. மேலும் அறிமுகமான சில வருடங்களிலேயே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்ததன் மூலம் அவருக்கு பாராட்டும் கிடைத்தது.

Anushka New Movie Named As Ghaati Here are the Full Details

பாகுபலி அனுஷ்கா: இதனையடுத்து தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வர ஆரம்பித்தார். தமிழ், தெலுங்கில் தனித்தனி மேனேஜரை வைத்திருக்கும் அளவுக்கு பிஸியான நடிகையாக திகழ்ந்தார் அனுஷ்கா. தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்தார். பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் இந்திய அளவில் ஹிட்டடித்தது. இதனையடுத்து மேற்கொண்டு பிரபலமான அனுஷ்கா ரசிகர்களால் தேவசேனா என்று அழைக்கப்பட்டார்.

குறைந்த வாய்ப்பு: ஃபுல் ஃபார்மில் இருந்த அனுஷ்கா ஆர்யாவுடன் இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்தார். அந்தப் படத்துக்காக உடல் எடையையும் கூட்டினார். ரொம்பவே டெடிகேஷனாக அந்தப் படத்துக்கு உழைத்தாலும் படம் எதிர்பார்த்த ரிசல்ட்டை கொடுக்கவில்லை. அதுமட்டுமின்றி ஏற்றிய உடல் எடையை குறைக்க முடியாமலும் திணறினார். இதன் காரணமாக அவருக்கு பட வாய்ப்புகளும் குறைய ஆரம்பித்தன.

செகண்ட் இன்னிங்ஸ்: இந்தச் சூழலில் அனுஷ்கா தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார். அதன்படி மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என்ற படத்தில் நடித்தார். படமானது கடந்த வருடம் வெளியானது. ஜவானோடு ரிலீஸானதால் படம் அடி வாங்கிவிடுமோ என்ற எண்ணம்தான் ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் ஃபீல் குட் படமாக அந்தப் படம் அமைந்திருக்கிறது. இதன் காரணமாக செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பத்திலேயே அனுஷ்கா உற்சாகமாக இருக்கிறார்.

மலையாளத்தில் அறிமுகம்:தற்போது அவர் மலையாளத்திலும் அறிமுகமாகிறார். அந்தப் படத்தை ஹோம் படத்தின் இயக்குநர் ரோஜின் தாமஸ் இயக்கவிருக்கிறார். படத்துக்கு காத்தனார் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் பிரபுதேவாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். முதன்முறையாக மலையாளத்தில் அனுஷ்கா அடியெடுத்து வைப்பதால் அங்கும் தேவசேனா தனது ஆட்சியை செய்வார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். இதற்கிடையே GOAT படத்தில் ஒரு பாடலுக்கு ஆட அனுஷ்காவிடம் அப்ரோச் சென்றதாகவும் அதனை அவர் நிராகரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

புதிய படம்: இந்நிலையில் அனுஷ்கா நடிக்கவிருக்கும் புதிய படம் பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவர் காதி என்ற படத்தில் நடிக்கிறார். இதனை வானம் படத்தை இயக்கிய கிரிஷ் இயக்குகிறார். மேலும் விக்ரம் பிரபுவும், ரம்யா கிருஷ்ணனும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரிலீஸாகியிருக்கிறது. படத்தை யூவி கிரியேஷன்ஸ், ஃபர்ஸ்ட் டைம் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. முதலில் தியேட்டரில் ரிலீஸாகும் இப்படம் பிறகு அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X