அனுஷ்கா ‘வெயிட்’ போட்டதுக்கு பின்னாடி இப்டி ஒரு ‘வெயிட்டான’ காரணம் இருக்குங்க!

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில் அனுஷ்கா நடிக்க இருக்கிறாராம்.

சென்னை: பாரதிராஜா இயக்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க பலர் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக இயக்குநர் விஜய், பிரியதர்ஷன் மற்றும் பாரதிராஜா இடையே கடும் போட்டி நிலவுகிறது.

விஜய் இயக்கும் படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் வித்யா பாலன் அல்லது நயன்தாரா நடிப்பார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாரதிராஜாவின் இயக்கத்தில்...

பாரதிராஜாவின் இயக்கத்தில்...

இந்நிலையில், பாரதிராஜாவும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை இயக்கும் வேலைகளைத் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. மும்பையைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் ஒன்று இப்படத்தை தயாரிக்க இருப்பதாகத் தெரிகிறது.

ஜெ.வாக அனுஷ்கா:

ஜெ.வாக அனுஷ்கா:

இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடிக்க இருக்கிறாராம். இப்படத்தில் பாரதிராஜாவுக்கு உறுதுணையாக அமீரும், வெற்றிமாறனும் பணியாற்ற இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தான் காரணம்:

இது தான் காரணம்:

சமீபத்தில் உடல் எடை கூடிய நிலையில் அனுஷ்கா தோற்றமளிப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. அனுஷ்காவின் அந்தப் புகைப்படங்களைப் பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், தற்போது இந்தக் கதாபாத்திரத்திற்காகத் தான் அவர் உடல் எடையை அதிகப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

பாகுபலி 2:

பாகுபலி 2:

ஏற்கனவே ஆர்யா ஜோடியாக நடித்த இஞ்சி இடுப்பழகி படத்திலும் அதிக எடை கொண்ட பெண்ணாக அனுஷ்கா நடித்திருந்தார். இப்படத்திற்குப் பின்னர் அவர் உடல் எடையைக் குறைக்க அதிக சிரமப்பட்டது நாமறிந்ததே. பாகுபலி 2 படக்காட்சிகளில் கூட அவரை ஒல்லியாகக் காட்ட கிராபிக்ஸ் உதவியை நாடினார் ராஜமௌலி என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X