»   »  கவர்ச்சியை வெறுக்கும் அனுஷ்கா 'சகுனி'யில் குத்தாட்டம்!

கவர்ச்சியை வெறுக்கும் அனுஷ்கா 'சகுனி'யில் குத்தாட்டம்!

By Sudha
Subscribe to Oneindia Tamil
கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூற ஆரம்பித்துள்ள நடிகை அனுஷ்கா, சகுனி படத்தில் கவர்ச்சிகரமான குத்தாட்டத்தில் ஆடியுள்ளாராம்.

கார்த்தி நாயகனாக நடிக்கும் படம் சகுனி. இப்படத்தில் குத்தாட்டம் ஆடியுள்ளாராம் அனுஷ்கா. தமிழிலும், தெலுங்கிலும் கை நிறையப் படங்களுடன் படு பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் அனுஷ்கா, சமீப காலமாக கவர்ச்சிகரமான கேரக்டர்கள் வேண்டாம், டான்ஸ் வேண்டாம், நீச்சல் உடை வேண்டாம் என்று வேண்டாம் பட்டியலை இயக்குநர்கள் முன்பு நீட்ட ஆரம்பித்துள்ளார்.

அதுதானே உங்களது பெரிய பலமே என்று இயக்குநர்கள் கூறினால் சிரித்து சமாளித்து விடுகிறாராம். இந்த நிலையில் சகுனி படத்தில் மட்டும் அவர் குத்தாட்டம் ஒன்றைப் போட்டுள்ளாராம்.

இதற்குக் காரணம் சூரியாவின் கோரிக்கை என்கிறார்கள். சிங்கம் படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்தார் அனுஷ்கா. அது முதல் சூர்யாவின் நல்ல நண்பியாகி விட்டாராம். இந்த நிலையில்தான் சகுனி படத்தில் அனுஷ்காவின் குத்தாட்டத்தை வைக்க விரும்பி அவரை அணுகினர். இதற்காக கார்த்தியின் அண்ணனான சூர்யாவின் உதவியையும் நாடினராம். அனுஷ்காவுக்கே கார்த்தியைப் பிடிக்கும், நல்ல நண்பர் என்பதாலும், சூர்யாவின் கோரிக்கையாலும் குத்தாட்டத்திற்கு ஒப்புக் கொண்டாராம்.

மொத்தத்தில் நட்புக்காக இந்த குத்தாட்டத்தை ஏற்றுக் கொண்டாராம் அனுஷ்கா என்கிறார்கள். இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிப்பவர் பிரணீதா. முன்னாள் குத்தாட்ட நாயகி மும்தாஜும் ஒரு முக்கிய வேடத்தில் படத்தில் தலை காட்டுகிறார்.

இருந்தாலும் இந்தப் படத்துக்கு மட்டும்தான் குத்தாட்டமாம். மறுபடியும் யாராவது குத்தாட்டத்திற்குக் கூப்பிட்டால் மறுத்து விடுவாராம் அனுஷ்கா.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Anushka, the glam doll of Tollywood is doing a cameo appearance in Karthi’s next movie “Saguni”. Anushka acted with Surya in the film “Singam”. The movie was a blockbuster hit and it opened new roads for her in Kollywood. Anushka maintains a good rapport with Surya and his family members. She is quite close with Surya’s brother Karthi too. The “Saguni” team used this friendship to make her dance for song in the film. Anushka readily agreed to the surprise of all. She is not paid a very huge amount for the song, but she decided to do it for friendship sake.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more