விரைவில் கல்யாணம்... கமல் பட வாய்ப்பையும் உதறிய அனுஷ்கா!
விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதால் கமல் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பையும் மறுத்துவிட்டாராம் அனுஷ்கா.
கிட்டத்தட்ட கடந்த எட்டு ஆண்டுகளாக தெலுங்கு, தமிழில் நடித்து வருகிறார் அனுஷ்கா. தமிழில் முதலில் அறிமுகமானது ரெண்டு படத்தில்.
ஆனால், அந்தப் படம் சரியாகப் போகாததால் மீண்டும் தெலுங்கிலேயே கவனம் செலுத்தி வந்த அனுஷ்காவுக்கு, மீண்டும் தமிழ்ப் பட வாய்ப்புகளைத் தந்தது அருந்ததி டப்பிங் படம்.

விஜய், சூர்யா, விக்ரம், ஆர்யா என முன்னணி ஹீரோக்களின் விருப்ப நாயகியாக மாறி கலக்க ஆரம்பித்த அனுஷ்கா தற்போது தெலுங்கில் 'ருத்ரம்மா தேவி', 'பாகுபாலி' என இரண்டு மிகப்பெரிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்தப் படங்கள் வெளியாகும் போதே திருமணம் செய்து செட்டிலாக முடிவு செய்துள்ளாராம். வயதும் 31 ஆகிவிட்டதால், இதற்கு மேல் திருமணத்தைத் தள்ளிப்போடு சரியல்ல என்ற அறிவுரைகளும் இதற்கு முக்கிய காரணமாம்.

இந்த நேரம் பார்த்துதான் கமலின் தமிழ் - தெலுங்குப் படமான உத்தம வில்லனில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. ஆனால் இதில் நடிக்க ஆரம்பித்தால், முடியும்போது 33 வயதாகிவிடும் என்பதால், 'ஸாரி...' என்று நாசூக்காக சொல்லி ஒதுங்கிக் கொண்டாராம் இந்த யோகா டீச்சர்!


Click it and Unblock the Notifications











