சென்னையில் வீடு தேடும் அனுஷ்கா!

By Chakra

Anushka
உயரப் பிரச்சினை கிளப்பிய குள்ள நடிகர்களின் முட்டுக் கட்டைகளையும் தாண்டி, தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளதாம் அனுஷ்காவுக்கு.

இதனால் அவர் தனது குடியிருப்பை சென்னைக்கே மாற்றிக் கொள்ள முடிவெடுத்து, வீடு பார்த்து வருகிறாராம்.

தமிழில் இதுவரை மூன்று படங்கள் நடித்துள்ளார் அனுஷ்கா. நல்ல உயரம் கொண்ட நடிகையான இவருக்கு ஏற்ற ஜோடி இதுவரை தமிழில் அமையவில்லையாம். இவருடன் சமீபத்தில் நடித்த நடிகர்கள் ஹை ஹீல்ஸ் ஷூ போட்டுக் கொண்டுதான் டூயட் பாட வேண்டியிருந்ததாம்.

இதனால், அவர் உயரத்தையே குறையாகக் காட்டி, அவருக்கு வாய்ப்பு தர வேண்டாம் என்றும் சில நடிகர்கள் தயாரிப்பாளர்களிடம் நேரடியாகக் கூறினார்களாம்.

ஆனால் அம்மணியின் வனப்பும், கவர்ச்சியும் தயாரிப்பாளர்களைத் தொடர்ந்து அவர் பக்கம் ஈர்த்து வருகிறதாம்.

இதன் விளைவாக அடுத்தடுத்து 3 பெரிய படங்களில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம் அனுஷ்கா.

தமிழ்ப் படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்த சென்னையிலேயே வாடகைக்கு அல்லது சொந்தமாக வீடு தேடி வருகிறாராம்.

எந்த வகையிலும் தனது தனிமை பாதிக்காத வகையில் இருக்கும்படி வீடு பார்க்கச் சொல்லி புரோக்கர்களை அணுகியிருக்கும் அனுஷ்காவுக்கு, இன்னமும் எதிர்பார்த்தபடி வீடு கிடைக்கவில்லையாம். இருந்தாலும் முயற்சியில் மனம் தளராமல் சென்னைவாசியாக மாறும் வேலையில் மும்முரமாக உள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X