»   »  ஹைதராபாத் அல்ல பெங்களூர் கோடீஸ்வரரை மணக்கும் நடிகை அனுஷ்கா

ஹைதராபாத் அல்ல பெங்களூர் கோடீஸ்வரரை மணக்கும் நடிகை அனுஷ்கா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நடிகை அனுஷ்காவுக்கும் பெங்களூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபருக்கும் திருமணம் என்று தெலுங்கு திரையுலகில் பேசிக் கொள்கிறார்கள்.

நடிகை அனுஷ்காவுக்கு 35 வயதாகிவிட்டது. அவருக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க விரும்புகிறார்கள் பெற்றோர். அனுஷ்கா பாகுபலி 2 உள்ளிட்ட படங்களில் பிசியாக உள்ளார்.

இந்நிலையில் அவரது பெற்றோர் அவருக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளார்களாம்.

ரியல் எஸ்டேட் அதிபர்

ரியல் எஸ்டேட் அதிபர்

மங்களூரை சேர்ந்த அனுஷ்காவுக்கும் பெங்களூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாம். திருமணத்திற்கு பிறகு சினிமாவுக்கு முழுக்குபோட அனுஷ்கா திட்டமிட்டுள்ளாராம்.

மாப்பிள்ளை

மாப்பிள்ளை

அனுஷ்காவுக்கு பார்த்து வைத்திருக்கும் மாப்பிள்ளை கோடீஸ்வரராம். பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் ஏகப்பட்ட சொத்துக்கள் உள்ளதாம். மாப்பிள்ளை அனுஷ்கா குடும்பத்தாருக்கு ஏற்கனவே நன்கு தெரிந்தவராம்.

புதிய படங்கள்

புதிய படங்கள்

அனுஷ்கா திருமணத்திற்கு தயாராவதால் புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொள்வில்லையாம். கையில் உள்ள படங்களை முடித்துவிட்டு பெங்களூர் மாப்பிள்ளையுடன் செட்டில் ஆக உள்ளாராம்.

கிசுகிசு

கிசுகிசு

அனுஷ்காவின் பெயர் சில நடிகர்களுடன் சேர்ந்து அடிபட்டது. தெலுங்கு திரையுலகில் உள்ள ஏற்கனவே திருமணமான தயாரிப்பாளரை திருமணம் செய்ய அனுஷ்கா அடம்பிடித்ததாகக் கூட பரபரப்பாக பேசப்பட்டது. முன்னதாக ஹைதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபரை அவர் திருமணம் செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டது.

English summary
According to reports, actress Anushka is set to marry a Bangalore based real estate owner.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil