அப்பாவுக்கு பர்த் டே.. பெற்றோருடன் இருக்கும் போட்டோவை வெளியிட்ட நடிகை அனுஷ்கா.. டச்சிங் போஸ்ட்!
சென்னை: நடிகை அனுஷ்கா தனது தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு, பெற்றோர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
தமிழ், தெலுங்கில் டாப் ஹீரோயின்களில் ஒருவர் அனுஷ்கா. அவர் இப்போது நடித்துள்ள படம், சைலன்ஸ் (நிசப்தம்).
இதில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை அடுத்து கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

நண்பர்கள்
இவரும் பிரபல தெலுங்கு ஹீரோ பிரபாஸூம் காதலித்து வருவதாக கடந்த சில வருடங்களாக செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. நாங்கள் நண்பர்கள்தான், எங்களுக்குள் வேறு எதுவும் இல்லை என்று இருவரும் கூறி வருகின்றனர். இருந்தாலும் அவர்கள் பற்றிய கிசு கிசு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

கிசு கிசு
இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதும் இந்த கிசு கிசு தொடர காரணம் என்று கூறப்படுகிறது. அவர் கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலித்து வருவதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், அனுஷ்கா இதை மறுத்தார். இந்நிலையில், அவர் இஞ்சி இடுப்பழகி இயக்குனர் பிரகாஷ் கோவலமுடியை திருமணம் செய்துகொள்ள இருப்பதாகச் செய்திகள் வெளியாகின.

கொரோனா
இதையும் அனுஷ்கா மறுத்தார். இந்நிலையில் இப்போது கொரோனா காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். நடிகர், நடிகைகளும் வீட்டில் இருக்கின்றனர். சில நடிகைகள், இன்ஸ்டாகிராமில் தாங்கள் வீட்டில் என்ன செய்கிறோம் என்பதை வீடியோ மற்றும் போட்டோவாக வெளியிட்டு வருகின்றனர்.

தந்தை பிறந்த நாள்
இந்நிலையில் வீட்டில் தனது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவழித்து வரும் நடிகை அனுஷ்கா ஷெட்டி, தனது தந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு, இன்ஸ்டாகிராமில், அப்பா ஏ.என்.விட்டல், அம்மா பிரஃபுல்லா ஆகியோருடன் இருக்கும் போட்டோவை நேற்று பதிவு செய்துள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உங்கள் நாள்
அந்தப் பதிவில், 'மிகவும் அழகான, அன்பான, உற்சாகமான தந்தை நீங்கள். எங்களுக்காக சிறந்த விஷயங்களை செய்திருக்கிறீர்கள். இன்று உங்கள் நாள். எப்போதும் புன்னகைத்துக் கொண்டே இருங்கள், ஏனென்றால், அது எங்களை மகிழ்விக்கும். இனிய பிறந்த நாள் அப்பா' என்று நெகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஏராளமான ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











