இன்ஸ்டாகிராம் விளையாட்டு.. திணறிப் போன அனுஷ்கா ஷர்மா.. உதவிய கணவர்.. வைரலாகும் வீடியோ!
மும்பை: இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகி உள்ள வார்த்தை விளையாட்டை எப்படி விளையாடுவது என்று தெரியாமல் திணறிய அனுஷ்கா ஷர்மாவுக்கு அவரது கணவர் விராத் கோலி உதவிய வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
நடிகர் ஷாருக்கானுடன் ரப் தே பனாதி ஜோடி படத்தின் மூலம் அறிமுகமான அனுஷ்கா ஷர்மா, கடந்த 2018ம் ஆண்டு ஷாருக் நடிப்பில் வெளியான ஜீரோ படத்தில் இறுதியாக நடித்துள்ளார்.

ராஜ் குமார் ஹிரானி இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற பிகே படத்தில் நடித்திருந்த அனுஷ்கா ஷர்மா, சுல்தான் படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்திய கிரிக்கெட் கேப்டன் வீராத் கோலியை திருமணம் செய்து கொண்ட நடிகை அனுஷ்கா ஷர்மா, தயாரிப்பில் வெப் சீரிஸ் ஒன்று உருவாகி வருகிறது.
அமேசான் பிரைமில் வரும் மே 15ம் தேதி வெளியாகவுள்ள PaatalLok என்கிற வெப் சீரிஸ் டீசரை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கியுள்ளார்.
இந்த லாக்டவுன் நேரத்தில், வெளியே செல்ல முடியாததால், தனது கணவர் விராத் கோலிக்கு அனுஷ்கா ஷர்மா ஹேர் கட் செய்திருந்த வீடியோ வெளியாகி வைரலானது.
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் ஃபில்டரில் இருக்கும் வார்த்தை விளையாட்டு ஒன்றை முயற்சி செய்துள்ளார் அனுஷ்கா ஷர்மா. ஆனால், சரியான வார்த்தையான Stranger Things என்பதை அனுஷ்கா ஷர்மாவால் கண்டுபிடிக்க முடியாமல் திணற கேமராவுக்கு பின்னாடி பக்கம் இருந்த விராத் கோலி சரியான பதிலை கூறி அனுஷ்காவுக்கு உதவிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











