»   »  கோஹ்லிக்கு அப்புறம் அனுஷ்கா சர்மாவின் புதிய “பிரண்ட்” இவர்தான்!

கோஹ்லிக்கு அப்புறம் அனுஷ்கா சர்மாவின் புதிய “பிரண்ட்” இவர்தான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கிரிக்கெட் வீரர் வீராத் கோஹ்லியை விட்டுப் பிரிந்த பின்னர் நடிகை அனுஷ்கா சர்மா ரொம்ப சோகமாக இருப்பார் என்றுதானே நினைக்கிறீர்கள்..

அதுதான் இல்லையாம்.. அவருக்கு இப்போது ஒரு சூப்பர் பிரண்ட் கிடைத்து விட்டாராம். எப்போது பார்த்தாலும் அவருடன்தான் ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கிறாராம் அனுஷ்கா சர்மா.

2008 ஆம் ஆண்டு ஷாருக்கானின் ரப் னே பனா தி ஜோடி படத்தின் மூலம் நடிக்க வந்தவர் அனுஷ்கா சர்மா. 27 வயதாகும் அனுஷ்காவும், விராத் கோஹ்லியும் 2013 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர்.

பிரச்சினையோ பிரச்சினை:

பிரச்சினையோ பிரச்சினை:

இந்தக் காதலால்தான் கோஹ்லியின் விளையாட்டுத் திறனே பாதிக்கப்பட்டது என்று கூட புகார்கள் குவிந்தன. இங்கிலாந்துக்கு கோஹ்லி போயிருந்தபோது கூட அனுஷ்காவும் போயிருந்ததும் பிரச்சினையானது.

முறிந்துபோன காதல்:

முறிந்துபோன காதல்:

இப்படிப்பட்ட நிலையில் தற்போது கோஹ்லி நன்றாக ஆட ஆரம்பித்துள்ள நிலையில் இருவரும் பிரிந்து விட்டனர். காதலும் முறிந்து போய் விட்டது. அவரவர் வழியில் போக ஆரம்பித்து விட்டனர்.

தூக்கிப் போட்ட கோஹ்லி:

தூக்கிப் போட்ட கோஹ்லி:

அனுஷ்காவை டிவிட்டர், இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வவதை நிறுத்தி விட்டார் கோஹ்லி. அன் பாலோ செய்து விட்டார். இருப்பினும் அனுஷ்கா இன்னும் அவசரப்படவில்லை. தொடர்ந்து தொடர்கிறார்.

மல்யுத்தப் பயிற்சி:

மல்யுத்தப் பயிற்சி:

தற்போது சுல்தான் என்ற படத்திற்காக தயாராகிக் கொண்டிருக்கிறார் அனுஷ்கா. இதற்காக தீவிரப் பயிற்சியிலும் அவர் இறங்கியுள்ளார். ஒரு மல்யுத்தக் காட்சிக்காக அவர் தயாராகி வரும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

வீராங்கனை அனுஷ்கா:

வீராங்கனை அனுஷ்கா:

இப்படத்தில் மல்யுத்த வீராங்கனையாக அவர் நடிக்கிறாராம். இதற்காக அவர் கடுமையான பயிற்சி எடுத்து வருகிறார். நிஜமான வீராங்கனையாக இதில் தோன்ற வேண்டும் என்பதற்காக தீவிரப் பயிற்சி செய்கிராராம்.

செல்ல நாய்தான் இப்போதைக்கு:

செல்ல நாய்தான் இப்போதைக்கு:

மேலும் தற்போது ஓய்வாக இருக்கும் நேரத்தில் எல்லாம் தனது செல்ல நாயுடன்தான் பொழுதைக் கழித்து வருகிறாராம் அனுஷ்கா. அதையும் போட்டோ போட்டுள்ளார் அனுஷ்கா.

என்னோட பெஸ்ட் பிரண்ட்:

என்னோட பெஸ்ட் பிரண்ட்:

கோஹ்லியைப் பிரிந்த பின்னர் அந்த நாய்தான் தற்போது அனுஷ்காவுக்கு நல்ல தோழியாக உள்ளதாம். சின்னச் சின்ன விஷயங்களை அனுபவித்து வருவதாகவும் அனுஷ்கா கூறியுள்ளார்.

English summary
The 27-year-old actress, who tweeted a video of a fight sequence from Sultan, is also 'enjoying the little things in life' and posted a picture of herself chilling out with her dog Dude.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil