ஐபிஎல் கோப்பையை தூக்கிய RCB..2வது முறை சாதித்த விராட் கோலி.. நடிகை அனுஷ்கா செஞ்சத பாருங்க
அகமதாபாத்: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதத்தில் கோலாகலமாக தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. நேற்று நடந்த இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இதில் RCB அணி அபார வெற்றி பெற்று தொடர்ச்சியாக இரண்டாவது முறை கோப்பையை கைப்பற்றியது. இதனால் அந்த அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி எமோஷனலாகிவிட்டார். இந்நிலையில் அவரை நடிகையும், அவரது மனைவியுமான அனுஷ்கா ஷர்மா தேற்றிய வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
உலக கிரிக்கெட்டில் ஐபிஎல் தொடர் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துவிட்டது. பல நாடுகளை சேர்ந்த வீரர்களும் இதில் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். அதனால்தான் 19 சீசன்களாக மவுசு குறையாமல் இருக்கிறது இத்தொடர். 19வது சீசன் கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கியது. ஒற்றை கோப்பைக்காக மொத்தம் பத்து அணிகள் முட்டி மோதின. அவற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ப்ளே ஆஃபுக்கு முன்னேறின.

இறுதிப்போட்டியில் பெங்களூரு: அவற்றில் பெங்களூருவும், குஜராத்தும் இறுதிப்போட்டிக்கு வந்தன. நேற்று அகமதாபாத்தில் இவ்விரு அணிகளும் மோதலில் ஈடுபட்டன. டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்ந்தெடுக்க; குஜராத் அணி முதலில் பேட் பிடித்து 155 ரன்களை மட்டுமே எடுத்தது. அடுத்ததாக பேட்டிங் பிடித்த பெங்களூரு அணி ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. விராட் கோலி கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
தொடர்ந்து இரண்டாவது முறை: ஐபிஎல் ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் பெங்களூரு அணியோ 2024ஆம் ஆண்டுவரை கோப்பையை வெல்ல முடியாமல் தவித்தது. அதன் காரணமாக ஏகப்பட்ட கிண்டல்களை அந்த அணி சந்தித்தித்திருக்கிறது. முக்கியமாக விராட் கோலியை இந்த விஷயத்தில் ரொம்பவே கிண்டல் செய்தவர்கள் எல்லாம் உண்டு. ஆனால் கடந்த வருடத்தில் பெங்களூரு முதன்முதலாக கோப்பையை வென்றது. இந்த வருடமும் வென்றிருப்பதன் மூலம் தொடர்ச்சியாக இரண்டாவது முறை பெங்களூரு கைகளுக்கு ஐபிஎல் கோப்பை சென்றிருக்கிறது.
எமோஷனலான கோலி: இந்நிலையில் நேற்று போட்டியில் வென்ற பிறகு விராட் கோலி ரொம்பவே எமோஷனலாக காணப்பட்டார். போட்டி முடிந்த பிறகு அனுஷ்கா ஷர்மா தனது தோழரின் கைகளை பிடித்து வந்துகொண்டிருந்தார். தூரத்திலிருந்து கணவர் கோலியை பார்த்தவுடனேயே தோழரின் கைகளை உதறிவிட்டு கற்றிக்கொண்டே ஓடி சென்று விராட் கோலியை கட்டியணைத்துக்கொண்டார். இரண்டு பேரும் சில நொடிகள் அணைத்தபடி இருந்தார்கள். அப்போது கோலி எமோஷனலாக; அனுஷ்கா ஷர்மா அவரை தேற்றி இயல்பு நிலைக்கு கொண்டு வந்தார். அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
சூப்பர் ஜோடி: முன்னதகா விராட் கோலியும், நடிகை அனுஷ்கா ஷர்மாவும் நீண்ட காலம் காதலித்துவந்தார்கள். இருவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்துகொண்ட பிறகு கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். இந்த ஜோடி உலகளவில் பிரபலமான ஜோடி என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்துக்கு பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கிவிட்டார் அனுஷ்கா என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
