விராட்டிற்கே டஃப் கொடுக்கும் அனுஷ்கா... சும்மா வெறித்தனம்!
சென்னை : கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் அனுஷ்காவும் காதலித்து கடந்த 2017ல் திருமணம் செய்துக் கொண்டனர்.
இவர்களுக்கு வாமிகா என்ற ஒரு பெண் குழந்தையும் உள்ளது. தொடர்ந்து தனது நடிப்பை தொடர்ந்து வருகிறார் அனுஷ்கா.
தற்போது இவர் செய்துள்ள ஒரு விஷயம், விராட் கோலிக்கே டப் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

நடிகை அனுஷ்கா சர்மா
கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் காதலித்து கடந்த 2017ல் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களின் மனமொத்த சிறப்பான வாழ்க்கைக்கு பரிசாக வாமிகா என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. இருவரும் அவரவர் கேரியரில் சிறப்பாக இருந்து வருகின்றனர்.

சிறப்பான திரைப்பயணம்
அனுஷ்கா தனது சகோதரருடன் இணைந்து தயாரிப்பையும் மேற்கொண்டு வருகிறார் தொடர்ந்து நடித்தும் வருகிறார். திருமணத்திற்கு பின்பும் இவரது சினிமா பயணம் சிறப்பாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது சக்தா எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

சக்தா எக்ஸ்பிரஸ் படம்
சக்தா எக்ஸ்பிரஸ் படத்தில் ஜூலான் கோஸ்வாமியின் குறிப்பிடத்தக்க கிரிக்கெட் பயணம் கதைக்களமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அவர் பெண்கள் தேசிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்வானது முதல் நாட்டில் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு முன்மாதிரியாக இருப்பது வரை இந்த படம் பேசுகிறது.

சிறப்பான வீராங்கனை
கடந்த 2018ல் இவரது நினைவாக இந்திய தபால் தலை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. சக்தா எக்ஸ்பிரஸ் படத்தை பாலிவுட் இயக்குனர் ரோஹித் ராய் இயக்கியுள்ளார். அனுஷ்கா சர்மா இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார். மேலும் அனுஷ்கா சர்மா தன்னுடைய சகோதரருடன் சேர்ந்து க்ளீன் ஸ்லேட்பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் இந்த படத்தை தயாரித்துள்ளார். விரைவில் நெட்பிளிக்சில் படம் ஒளிபரப்பாக உள்ளது.

ஜூலானாக அனுஷ்கா
இந்தப்படத்தில் ஜூலானாக நடிப்பதற்காக தீவிரமாக வலை பயிற்சியை செய்து வருகிறார் அனுஷ்கா சர்மா. வாரத்தில் 6 நாட்கள் தினமும் மூன்று மணி நேரம் இந்த படத்திற்காக அவர் பயிற்சி செய்து வருகிறாராம். இந்நிலையில் சக்தா எக்ஸ்பிரஸ் படத்திற்காக அனுஷ்கா சர்மா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

பயிற்சி வீடியோ
இந்த வீடியோ ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்டு வருகிறது. மேலும் அதிகமாக ரசிகர்கள் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். இதனிடையே சக்தா எக்ஸ்பிரஸ் தயாரிப்பு பணி மிகவும் கடினமாகவும் தீவிரமாகவும் இருப்பதாக அனுஷ்கா சர்மா தனது கேப்ஷனில் தெரிவித்துள்ளார்.

நாட்களை எண்ணும் அனுஷ்கா
நாங்கள் நாட்களை எண்ணுகிறோம் என்றும் அவர் அந்தக் கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் உண்மையான கிரிக்கெட் வீராங்கனை ஆகவே காட்சி அளிக்கிறார். அந்த அளவிற்கு அவரது பயிற்சிகள் காணப்படுகின்றன. நிலைமையைப் பார்த்தால் விராட் கோலிக்கே போட்டியாக வந்து விடுவார் போல.


Click it and Unblock the Notifications











