»   »  சின்ன வயது நினைவுகளோடு... 27வது பிறந்த நாளைக் கொண்டாடிய அனுஷ்கா சர்மா!

சின்ன வயது நினைவுகளோடு... 27வது பிறந்த நாளைக் கொண்டாடிய அனுஷ்கா சர்மா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை அனுஷ்கா சர்மா இன்று தனது 27வது பிறந்த நாளை உற்சாகமாகக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி தனது சிறு வயது புகைப்படம் ஒன்றையும் தனது பேஸ்புக்கில் போட்டுள்ளார்.

ரப் நே பனா தி ஜோடி படத்தில் நடித்து அறிமுகமான அனுஷ்கா சர்மா பிகே படத்தில் அட்டகாசமான ரிப்போர்ட்டர் வேடத்தில் பிரமிக்க வைத்திருந்தார். இப்போது இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் விராத் கோஹ்லியின் காதலியாகவும் வலம் வருகிறார்.

இன்று அனுஷ்காவுக்கு 27வது பிறந்த நாளாகும். இதையொட்டி பாலிவுட்டினர் அவரை வாழ்த்து மழையால் நனைத்து விட்டனர்.

9 படங்கள் மட்டுமே...

9 படங்கள் மட்டுமே...

2008ம் ஆண்டு முதல் நடித்து வருகிறார் அனுஷ்கா. இதுவரை அவர் 9 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆனால் ஒவ்வொரு பாத்திரமும் பேசப்பட்டவையாகும்.

ஷபானா ஆஸ்மி வாழ்த்து...

ஷபானா ஆஸ்மி வாழ்த்து...

அனுஷ்காவுக்கு பழம்பெறும் நடிகை ஷபானா ஆஸ்மி டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், டியர் அனுஷ்கா சர்மா, உனக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள். லாட்ஸ் ஆப் லவ் என்று வாழ்த்தியிருந்தார்.

பாம்பே வெல்வெட்...

பாம்பே வெல்வெட்...

அனுஷ்கா சர்மா தற்போது பாம்பே வெல்வெட் என்ற படத்தில் நடித்துள்ளார். அவருடன் ரன்பீர் கபூர் நடித்துள்ளார்.

ஹேப்பி பர்த்டே டூ யூ...

ஹேப்பி பர்த்டே டூ யூ...

பிறந்த நாளையொட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் சிறு குழந்தையாக இருந்த போது தனது தாயாருடன் பிறந்த நாள் கேக் கட் செய்யும் படத்தைப் போட்டுள்ளார் அனுஷ்கா.

அனுஷ்.. கிட்ட வாங்க, கோஹ்லி என்ன கிப்ட் கொடுத்தார்??

English summary
From a shy and beautiful girl in “Rab Ne Bana Di Jodi” to a helpful TV reporter in “PK,” young and vivacious Anushka Sharma, who turned 27 on Friday, has proved her potential as an actress in each of her films she has been a part of.
Please Wait while comments are loading...