அனுஷ்கா ஷர்மாவின் அடுத்த அதிரடி.. அமேசான் பிரைமில் வருது புதிய வெப்சீரிஸ்!

மும்பை: பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா தயாரிப்பில் உருவாகி உள்ள புதிய வெப்சீரிஸ் அமேசான் பிரைமில் விரைவில் ஒளிபரப்பப்பட உள்ளது.

Recommended Video

Celebrity Quarantine pets | Dhruv | Priya Atlee |Yashika

நடிகர் ஷாருக்கானின் ரப்னே பனாதி ஜோடி படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு அறிமுகமானவர் அனுஷ்கா ஷர்மா.

தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள அனுஷ்கா ஷர்மா, ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான் என மூன்று கான்களுடனும் நடித்துள்ளார்.

Anushka Sharma turns producer for Amazon Prime Video series

பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மா இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியை திருமணம் செய்துக் கொண்டார்.

கடைசியாக ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜீரோ படத்தில் நடித்திருந்த அனுஷ்கா ஷர்மா, ஷாருக்கானை போலவே கடந்த இரு ஆண்டுகளாக புதிய படங்கள் எதிலும் கமீட் ஆகவில்லை.

இந்நிலையில், தனது தயாரிப்பு நிறுவனம் சார்பாக வெப் சீரிஸ் ஒன்றை தயாரித்துள்ளார்.

இன்னமும் பெயரிடாத அந்த வெப் சீரிஸ் விரைவில் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது குறித்த அறிமுக டீசரை தற்போது தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

Anushka Sharma turns producer for Amazon Prime Video series

ரத்தம் சொட்ட சொட்ட இருக்கும் இந்த சின்ன டீசரில், வெப் சீரிஸின் பெயரோ அல்லது மற்ற எந்தவொரு தகவலோ தெரியவில்லை.

குல் பனாக், ஜெய்தீப் அலாவாட், அபிஷேக் பானர்ஜி, பெங்காலி நடிகர் ஸ்வஸ்திகா முகர்ஜி மற்றும் நீரஜ் கபி உள்ளிட்டோர் இந்த வெப்சீரிஸில் நடித்துள்ளனர்.

அனுஷ்கா ஷர்மாவின் க்ளீன் சிலேட் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இந்த வெப் சீரிஸிலும் நடிகை அனுஷ்கா நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X