அனுஷ்காவுக்கு மெழுகுச் சிலை: கணவர் கோஹ்லி சிலையில் இல்லாத ஒன்று இந்த சிலையில்
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாடஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள தனது மெழுகுச் சிலையை நடிகை அனுஷ்கா சர்மா திறந்து வைத்தார்.
பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம் மெழுகுச் சிலை வைத்துள்ளது. சிங்கப்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் அனுஷ்காவின் சிலை வைக்கப்பட்டுள்ளது.
அந்த சிலையை திறந்து வைக்க அனுஷ்கா சிங்கப்பூர் சென்றார்.
அனுஷ்கா
அனுஷ்கா சர்மா தனது மெழுகுச் சிலையை திறந்து வைத்துள்ளார். அந்த சிலை அப்படியே அனுஷ்கா போன்றே உள்ளது. தனது சிலையை திறந்து வைத்த அனுஷ்கா அதனுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
பேசும் சிலை
மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளில் அனுஷ்காவின் சிலைக்கு மட்டும் ஒரு சிறப்பு உண்டு. அனுஷ்காவின் சிலை பேசும். மேலும் அதன் கையில் உள்ள கேமரா மூலம் செல்ஃபி எடுக்க முடியும். பாலிவுட் பிரபலங்கள் ஐஸ்வர்யா ராய், ரித்திக் ரோஷன், கரீனா கபூர் உள்ளிட்ட பலருக்கும் மெழுகுச் சிலை வைக்கப்பட்ட போதிலும் அவை பேசாது.

கோஹ்லி
அனுஷ்காவின் கணவரான கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லிக்கும் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கோஹ்லி சிலையை விட அனுஷ்கா சிலை மிகவும் அருமையாக உள்ளது என்பதே உண்மை. கோஹ்லியின் சிலை கடந்த ஜூன் மாதம் திறந்து வைக்கப்பட்டது.

கிரிக்கெட்
அனுஷ்கா படங்களிலும், கோஹ்லி கிரிக்கெட்டிலும் பிசியாக உள்ளனர். நேரம் கிடைக்கும் போது எல்லாம் ஜோடியாக எங்காவது கிளம்பி விடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











