'அணில் ஆடு இலை ஈ'..... அஜீத் படத்துக்காக தமிழ் கற்று சொந்தக் குரலில் பேசப் போகும் அனுஷ்கா!

சென்னை: இதுவரை டப்பிங் கலைஞார்கள் மூலம் திரையில் பேசி வந்த நடிகை அனுஷ்கா முதன்முறையாக அஜீத் படத்தில் சொந்தக் குரலில் பேச திட்டமிட்டுள்ளாராம். இதற்காக தமிழ் கற்று வருகிறாராம்.

ஆரம்பம், வீரம் படங்களைத் தொடர்ந்து அஜீத் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடி அனுஷ்கா. ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இன்னும் பெயர் வைக்கப்படாத இப்படத்தில் அஜீத் இரட்டை வேடத்தில் நடிப்பதாகச் சொல்லப் படுகிறது. தற்போது சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

இப்படத்தின் தலைப்பு அஜீத் பிறந்த தினமான மே 1ம் தேதி வெளியிட திட்டமிட்டுருப்பதாகத் தெரிகிறது. நவம்பர் மாதம் படம் ரிலீசாகலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

முதலில் சண்டை... பிறகு காதல்

முதலில் சண்டை... பிறகு காதல்

படப்பிடிப்பின் முதல் காட்சியே அஜீத்தோடு அஜீத் மோதுவது போன்று தான் படமாக்கப் பட்டுள்ளதாம். தற்போது அஜீத், அனுஷ்கா நடிக்கும் காட்சிகளை கவுதம் மேனன் படமாக்கி வருகிறார்.

இனிய தமிழில் அனுஷ்கா...

இனிய தமிழில் அனுஷ்கா...

அஜீத்துடன் அனுஷ்கா ஜோடி சேர்வது இதுவே முதல் முறை. அத்தோடு இப்படம் மூலம் இனிய தமிழில் பேச முடிவெடுத்துள்ளாராம் அனுஷ்கா.

முதன்முறையாக...

முதன்முறையாக...

இதுவரை அனுஷ்காவுக்கு டப்பிங் கலைஞர்களே தமிழில் குரல் கொடுத்து வந்தனர். முதல்முறையாக தன் சொந்தக்குரலில் பேச அனுஷ்கா முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

வெயிட் அண்ட் சீ....

வெயிட் அண்ட் சீ....

சொந்தக் குரலில் பேச வேண்டும் என்பது இயக்குநரின் கட்டளை என்றும் இதற்காகவே தமிழ் கற்க துவங்கியுள்ளார் அனுஷ்கா என்றும் சொல்லப் படுகிறது. அவரது அழகைப் போலவே குரலும் ரசிகர்களைச் சென்று சேர்கிறதா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X