Anushka Net Worth - 44 வயதில் கெத்து காண்பிக்கும் ஸ்வீட்டி அனுஷ்கா.. யப்பா சொத்து மதிப்பு அசரடிக்குதே!

சென்னை: அனுஷ்கா இப்போது தனது செகண்ட் இன்னிங்ஸை நடிப்பில் தொடங்கியிருக்கிறார். மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்துக்கு பிறகு அவர் நடித்திருந்த காதி திரைப்படம் சிறப்பாக இருந்தாலும் ஏனோ பெரிய வெற்றியை பெறவில்லை. அடுத்ததாக காத்தனார் என்ற மலையாள படத்தில் நடிக்கவிருக்கும் அவர் இன்று தனது 44ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.

ஸ்வீட்டி என்று திரைத்துறையினராலும், ரசிகர்களாலும் கொண்டாடப்படும் அனுஷ்கா யோகா டீச்சராக இருந்து பிறகு நடிகையாக அறிமுகமானவர். முதல் படத்திலேயே மிகப்பெரிய ஸ்டாரான நாகார்ஜுனாவுடன் ஜோடியாகும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார். கிளாமர், ஹோம்லி என எந்த ரோலாக இருந்தாலும் அசால்ட்டாக ஸ்கோர் செய்யக்கூடிய அனுஷ்கா பான் இந்தியா ஹீரோயினாகவும் ஜொலித்தார்.

இஞ்சி இடுப்பழகி: ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த அவரது நடிப்பு பயணத்தில் மறக்க முடியாத படமாக அமைந்துவிட்டது இஞ்சி இடுப்பழகி. ஆர்யா ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படம் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக உருவாகியிருந்தது. இதன் காரணமாக உடல் எடையை கணிசமாக உயர்த்தினார். ஆனால் படமும் ஓடவில்லை; அனுஷ்காவின் மார்க்கெட்டும் அதற்கு பிறகு நகரவில்லை. ஏற்றிய எடையை குறைக்க முடியாமல் திணற; வாய்ப்புகள் அப்படியே அதள பாதாளத்துக்கு சென்றுவிட்டன.

Anushka Shetty Birthday Sher Turns 44 Today Here are Details about Her Net Worth
Photo Credit:

இரண்டாவது இன்னிங்ஸ்: அனுஷ்காவுக்கென்று எப்போதுமே தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. அவர் நடிக்காமல் இருந்த காலத்தில்கூட அவரது புகைப்படங்கள், பேட்டி கொடுத்த வீடியோக்கள் என பலவற்றை ஷேர் செய்து மீண்டும் ஸ்வீட்டி நடிக்க வர வேண்டும் என்று ஏங்கியிருந்தார்கள் ரசிகர்கள். இப்படிப்பட்ட சூழலில் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தில் நடித்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். படம் ஃபீல் குட் படமாக இருந்தது.

காதி அனுஷ்கா: அந்தப் படத்துக்கு பிறகு நடித்த காதி திரைப்படமும் நன்றாகவே இருந்தது. அனுஷ்காவும் ஆக்‌ஷன் காட்சிகளில் எல்லாம் பட்டையை கிளப்பியிருந்தார். இருப்பினும் படம் பெரிய வெற்றியை பெறவில்லை. இதனால் அவர் கொஞ்சம் அப்செட்தான். அடுத்ததாக காத்தனார் என்ற மலையாள படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் அவர் இன்று தனது 44ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து சொல்லும் சூழலில் ஸ்வீட்டியின் சொத்து மதிப்பு குறித்து தெரியவந்திருக்கிறது.

அனுஷ்காவின் சொத்து மதிப்பு: அதன்படி ஒரு படத்துக்கு 6 கோடி ரூபாய்வரை சம்பளமாக வாங்குகிறாராம் அனுஷ்கா. பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் சொகுசு பங்களா வைத்திருக்கும் அவர் தான் சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பிற தொழில்களில் முதலீடு செய்து வருமானம் பார்த்துவருகிறார். BMW, Audi உள்ளிட்ட சொகுசு கார்களை வைத்திருக்கும் அவருக்கு மொத்தம் 140 கோடி ரூபாய்வரை சொத்து இருக்கிறதாம். முன்னதாக 44 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X