அய்யோடா.. 14 வருஷமா..? தொடர்ந்து ஹீரோயினாகவே வலம் வரும் அனுஷ்கா! சுவாரசிய தகவல்கள்!

சென்னை: நடிகை அனுஷ்கா ஷெட்டி சினிமாவுக்கு வந்து நாளையுடன் 14 ஆண்டுகள் நிறைவடைகிறது.

நடிகை அனுஷ்கா ஷெட்டி 1981-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ம் தேதி, கர்நாடக மாநிலம் மங்களூரில் பிறந்தார். இவரது தந்தை ஏ.என்.விட்டல் ஷெட்டி, ஒரு பொறியாளர். தாய் ஃபிரபுல்லா. அனுஷ்காவுக்கு இரண்டு அண்ணன்கள் உள்ளனர்.

தனது தந்தையின் வற்புறுத்தலால் விடுமுறை நாட்களில் யோகா பயிற்சி வகுப்புகளில் பங்கேற்ற அவர், பின்னர் முழு ஈடுபாட்டுடன் யோகா பயிற்சி மேற்கொண்டார்.

திரைத்துறையில் அறிமுகம்

திரைத்துறையில் அறிமுகம்

யோகா கலையால் கவரப்பட்ட அவர் மும்பையில் யோகா ஆசிரியர் பரத் தாகூரிடம் யோக கலையை முழுமையாக பயின்று, தீட்சை பெற்று யோகா பயிற்றுனரானார். யோக குரு பரத் தாகூரின் மனைவியான நடிகை பூமிகாவின் நண்பர் மூலம் திரைத்துறைக்கு வந்தார் அனுஷ்கா.

தமிழில் ரெண்டு

தமிழில் ரெண்டு

நடிகை அனுஷ்கா 2005 ஆம் ஆண்டு சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் நாகார்ஜுனா ஜோடியாக அறிமுகமானார். 2006ஆம் ஆண்டு தமிழில் மாதவனுடன் ரெண்டு என்ற படத்தில் அறிமுகமானார்.

கவர்ச்சி நாயகி

கவர்ச்சி நாயகி

கடந்த பத்து வருடங்களில் 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை அனுஷ்கா. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார்.தொடக்கத்தில் ஒரு சராசரி கவர்ச்சி நாயகியாக வலம் வந்தார் அனுஷ்கா.

ஹிட்டான அருந்ததி

ஹிட்டான அருந்ததி

2009ஆம் ஆண்டு வெளியான அருந்ததி படம் அவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது. அருந்ததி படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தினார் அனுஷ்கா. இந்த படம் தமிழிலும் வெளியாகி ஹிட்டடித்தது. வசூலையும் குவித்தது.

முன்னணி நடிகர்களுடன்

முன்னணி நடிகர்களுடன்

இதைத்தொடர்ந்து தெலுங்கில் மகேஷ் பாபு, பிரபாஸ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடனும், தமிழில் விஜய், அஜித், சூர்யா, ரஜினி, கார்த்தி, விக்ரம், ஆர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம்

கதாநாயகிக்கு முக்கியத்துவம்

இதைத்தொடர்ந்து வெளியான ருத்ரமாதேவி, பாகுபலி உள்ளிட்ட படங்களும் அனுஷ்காவுக்கு பெயரையும் புகழையும் அள்ளிக்கொடுத்தன. தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார் அனுஷ்கா.

14 வருடங்கள் ஹீரோயின்

14 வருடங்கள் ஹீரோயின்

நடிகை அனுஷ்கா சினிமாவுக்கு வந்து நாளையுடன் 14 வருடங்கள் ஆகிறது. அனுஷ்கா தொடர்ந்து 14 ஆண்டுகள் ஹீரோயினாக உள்ளார். ஒரு நடிகையாக 14 ஆண்டுகள் போட்டி நிறைந்த சினிமாத்துறையில் ஹீரோயினாக இருப்பது சாதாரணமான விஷயம் அல்ல. சாதித்திருக்கிறார் அனுஷ்கா.

முதல் தோற்றம் நாளை

முதல் தோற்றம் நாளை

இப்போது வாய் பேசாத காது கேளாத பெண்ணாக ‘நிசப்தம்' படத்தில் நடிக்கிறார் அனுஷ்கா. இதில் மாதவன், ஷாலினி பாண்டே ஆகியோரும் உள்ளனர். இந்த படத்தின் முதல் தோற்றத்தை நாளை வெளியிடுகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் படம் வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X