என்னது திருமணமா?.. காட்டமாக அனுஷ்கா தரப்பு சொன்னது தெரியுமா?.. ஹீரோக்களை விட்டு வைக்கவில்லையே
சென்னை: தமிழ், தெலுங்கில் ஃபேமஸான நடிகையாக இருக்கும் அனுஷ்கா இப்போது தனது செகண்ட் இன்னிங்ஸை நடிப்பில் தொடங்கியிருக்கிறார். மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படம் ஃபீல் குட்டாக அமைந்திருந்தது. அதற்கு பிறகு அவர் நடித்திருந்த காதி திரைப்படம் சிறப்பாக இருந்தாலும் ஏனோ பெரிய வெற்றியை பெறவில்லை. அடுத்ததாக காத்தனார் என்ற மலையாள படத்தில் நடிக்கவிருக்கும் அவருக்கு தற்போது 44 வயது ஆகிறது. இன்னமும் சிங்கிளாகவே இருக்கிறார். சூழல் இப்படி இருக்க அவருக்கு திருமணம் நடக்கவிருப்பதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது.
கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் பெரிய சாம்ராஜ்ஜியத்தையே வைத்திருந்தவர் அனுஷ்கா. திரைத்துரையினராலும், ரசிகர்களாலும் ஸ்வீட்டி என்று கொண்டாப்படும் அவர்; யோகா டீச்சராக இருந்து பிறகு நடிகையாக அறிமுகமானவர். முதல் படத்திலேயே மிகப்பெரிய ஸ்டாரான நாகார்ஜுனாவுடன் ஜோடியாகும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார். கிளாமர், ஹோம்லி என எந்த ரோலாக இருந்தாலும் அசால்ட்டாக ஸ்கோர் செய்யக்கூடிய அனுஷ்கா பாகுபலி படத்தின் மூலம் பான் இந்தியா ஹீரோயினாகவும் ஜொலித்தார்.

இஞ்சி இடுப்பழகியால் வந்த வினை: ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த அவரது நடிப்பு பயணத்தில் எப்போதும் மறக்க முடியாத படமாக அமைந்துவிட்டது இஞ்சி இடுப்பழகி. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அந்தப் படம் உருவாகியிருந்ததால்; உடல் எடையை கூட்டினார். ரொம்பவே கஷ்டப்பட்டு அப்படத்தில் நடித்தாலும் படம் தோல்வியைத்தான் சந்தித்தது. அனுஷ்காவின் மார்க்கெட்டும் அதற்கு பிறகு சரிந்துவிட்டது. ஏற்றிய எடையை குறைக்க முடியாமலும் திணறிவிட்டார் அவர்.
இரண்டாவது இன்னிங்ஸில் அனுஷ்கா: இனிமேல் அவர் மீண்டும் நடிக்க மாட்டார் என்று பலரும் பேசிய நிலையில் அவருக்கென்று எப்போதும் இருக்கும் ரசிகர்கள்; அவர் நடிக்காமல் இருந்த காலத்தில்கூட அவரது புகைப்படங்கள், பேட்டி கொடுத்த வீடியோக்கள் என பலவற்றை ஷேர் செய்து மீண்டும் ஸ்வீட்டி நடிக்க வர வேண்டும் என்று ஏங்கியிருந்தார்கள். இப்படிப்பட்ட சூழலில் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தில் நடித்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். படம் ஃபீல் குட் படமாக இருந்தது. வணிக ரீதியாகவும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது.
அடுத்த படங்கள்: அந்தப் படத்துக்கு பிறகு நடித்த காதி திரைப்படமும் நன்றாகவே இருந்தது. அவரும் சண்டை காட்சிகளில் எல்லாம் பட்டையை கிளப்பியிருந்தார். இருப்பினும் படம் பெரிய வெற்றியை பெறவில்லை. இதனால் அவர் கொஞ்சம் அப்செட்தான். அடுத்ததாக காத்தனார் என்ற மலையாள படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதற்கிடையே அவருக்கு இப்போது 44 வயது ஆகிறது. ஆனால் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். நிலைமை இபப்டி இருக்க அவருக்கு விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வட்டமடித்தன.
அனுஷ்கா தரப்பு விளக்கம்: இந்நிலையில் அதுகுறித்து அனுஷ்காவின் டீம் விளக்கமளித்திருக்கிறது. அந்த விளக்கத்தில், "ஒருவரது வாழ்க்கையை தலைப்பு செய்தியாக்கும் முன்பு அவரிடம் அந்த செய்தி பற்றி கேட்டு உறுதி செய்துகொள்ள வேண்டும். எல்லா செய்திகளிலும் அனுஷ்காவுக்கு 44 வயது என்பதை பெரிதாக பேசுகிறார்கள். அது என்ன அவ்வளவு பெரிய பிரச்னையா?.. வயதை சொல்லி கிண்டல் செய்கிறீர்கள். வயதுதான் அவ்வளவு முக்கியம் என்றால் ஹீரோக்களின் வயது குறித்து அதே எனர்ஜியுடன் எழுத வேண்டும். பெண்களுக்கு மட்டும் ஏன் இப்படி?" என குறிப்பிடப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications















