படுக்கையில் படுத்துக் கொண்டு.. அனுஷ்கா வெளியிட்ட அந்த புகைப்படம்.. என்ன ஒரு வசீகரம்!

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. அதன் காரணமாக லாக் டவுனை மத்திய அரசு மே 3ம் தேதி வரை நீட்டித்துள்ளது.

Recommended Video

Quarantine Paridhabangal | Shriya | Kushbhu | Shilpa shetty | Lock Down

இந்நிலையில், நடிகை அனுஷ்கா, தனது படுக்கையறையில் படுத்துக் கொண்டு, அவரது வசீகரமான அந்த இரண்டு கண்கள் மட்டும் தெரியும் படி பெட்ஷீட்டை இழுத்துப் போர்த்திக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

Anushka Shetty’s insta post goes viral!

பாகுபலி படத்திற்கு பிறகு அனுஷ்கா நடிப்பில் வெளியான பாகமதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.

பாலிவுட்டிலும் அந்த படத்தை புமி பெட்னேகர் ரீமேக் செய்து நடித்து வருகிறார்.

அனுஷ்கா, மாதவன் நடிப்பில் உருவான நிசப்தம் படம் ஜனவரி 31ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு, கடைசி நேரத்தில் அந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது.

சைலன்ஸ் என படத்தின் பெயரில் மீண்டும் மாற்றத்தைக் கொண்டு ஏப்ரல் 2ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தனர். ஆனால், கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், அனுஷ்காவின் சைலன்ஸ் படம் சத்தம் காட்ட இன்னும் பல மாதங்கள் ஆகும் என தெரிகிறது.

இந்நிலையில், அனுஷ்கா தனது படுக்கையில் படுத்தபடி லாக்டவுன் இன்னும் மே 3 வரை நீடிக்கிறதா? ஏதும் பேசக் கூடாது என்பது போன்ற எமோஜியை கேப்ஷனாக போட்டு ஷேர் செய்துள்ள புகைப்படத்திற்கு லட்சக் கணக்கில் லைக்குகள் குவிந்து வருகின்றன.

மேலும், தெலுங்கு வருடப் பிறப்பு குறித்த வாழ்த்தையும் தனது ரசிகர்களுக்கு, இன்னொரு போஸ்ட் மூலம் நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X