அதிரடி ஆக்ஷன் ராணி அனுஷ்கா…
யோகா டீச்சராக இருந்து சினிமாவிற்கு வந்தவர் அனுஷ்கா. தெலுங்கில் இருந்து ரெண்டு படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அவரை பிரபலப்படுத்தியது அருந்ததி திரைப்படம்.
இந்த படத்தின் மூலம் அதிரடி நாயகியாக அறியப்பட்டார் அனுஷ்கா. ஆனாலும் தொடர்ந்து நடித்த படங்களில் அனுஷ்காவிற்கு அதிக அளவில் முக்கியத்துவம் தரப்படவில்லை.
தற்போது ருத்ரம்மா தேவி, இரண்டாம் உலகம், பாகுபாலி என அனுஷ்கா நடித்து வரும் படங்களில் ஆக்ஷன் அவதாரம்தான். இந்த படங்களின் ரிலீஸை ஆவலோடு எதிர்நோக்கியுள்ள அனுஷ்கா பிரபல நடிகர்களின் படங்களை சத்தமில்லாமல் மறுத்து வருகிறார்.

அருந்ததீ
தீமையை எதிர்த்து போராடும் கதாபாத்திரத்தில் அனுஷ்கா அசத்தியிருப்பார். அவரது உயரம், அதற்கேற்ப நடனம், உடை அலங்காரம் என அனைத்துமே அசத்தல்தான்.
வளேந்தி போராடும் காட்சியில் கண்களின் தெறித்த அந்த ஆக்ரோசம் அனுஷ்காவை ஆக்ஷன் நாயகியாக்கியது.

பில்லா
பிரபாஸ் உடன் அனுஷ்கா நடித்த பில்லா படம் சூப்பர் ஹிட். கேங்ஸ்டாரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில் துப்பாக்கிச் சண்டை போட்டிருப்பார் அனுஷ்கா.

ருத்ரம்மா தேவி
காகாதீயா மன்னர் வம்சத்து இளவரசியாக நடிக்கிறார் அனுஷ்கா. 3டி யில் உருவாகும் இந்த படத்தில் ராணா டகுபதி அனுஷ்காவின் கணவராக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் உருவாகும் இந்த படத்தில் அதிக ஆக்ரோஷமான அனுஷ்காவைக் காணலாமாம்.

இரண்டாம் உலகம்
செல்வராகவன் இயக்கத்தில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் படம் ஆர்யா ஜோடியாக அனுஷ்கா நடித்திருக்கிறார். ஜென், சுபீ தத்துவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இதுவும் ஆக்ஷன் ரொமான்டிக் திரைப்படம் என்கின்றனர்.

பாகுபாலி
எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கி வரும் சரித்திர திரைப்படம் பாகுபாலி. இதில் வாளேந்தி நடித்திருக்கிறார் அனுஷ்கா. 200 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் பிரபாஸ், ராணா ஆகியோர் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











