பொங்கல் பண்டிகையை எங்க, யாரோட கொண்டாட போகிறார்? ஓபனாக சொன்னார் அனுஷ்கா
சென்னை: பொங்கல் பண்டிகையை எப்படி, யாருடன் கொண்டாடப் போகிறேன் என்பதை தெரிவித்துள்ளார் நடிகை அனுஷ்கா.
அனுஷ்கா நடித்துள்ள படம், நிசப்தம். இதில் மாதவன், ஷாலினி பாண்டே, அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இந்தப் படம் வரும் 31 ஆம் தேதி வெளியாக உள்ளது.

திருமணம்
இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் அனுஷ்கா கலந்துகொள்ளவில்லை. அதில் கலந்துகொண்டால், தனது தனிப்பட்ட காதல், திருமணம் குறித்து கேட்பார்கள் என்பதால் அதைத் தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது.

தவிர்க்க முடியாமல்
இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள ஸ்டூடியோ ஒன்றுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் சென்றார் அனுஷ்கா. அங்கு செய்தியாளர்களை கண்டதும், தவிர்க்க முடியாமல் அவர்களிடம் பேசினார்.

அப்பா, அம்மாவுடன்
அப்போது, பொங்கல் பண்டிகையை எங்கு கொண்டாடப் போகிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு பெங்களூரில் அப்பா, அம்மாவுடன் கொண்டாட இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார், 38 வயதான இந்த ஹீரோயின்.

பிரபாஸுடன் காதல்
தமிழ், தெலுங்கில் நடித்துவரும் அனுஷ்கா, தெலுங்கு ஹீரோ பிரபாஸை காதலித்து வருவதாகக் கூறப்பட்டது. இருவரும் மறுத்து வருகின்றனர். இருந்தாலும் இந்த கிசு கிசு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











