புதிய படத்திற்காக லுக்கை மாற்றிய அனுஷ்கா ஷெட்டி... அட சிக்குனு இருக்காரா?

சென்னை : பாகுபலி புகழ் அனுஷ்கா ஷெட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

மாதவன் நடித்த இரண்டு திரைப்படத்தின் மூலம் தமிழில் தனது திரைப்பயணத்தை தொடங்கினார் அனுஷ்கா.

இதையடுத்து ரஜினி, விஜய்,சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார்.

அனுஷ்கா ஷெட்டி

அனுஷ்கா ஷெட்டி

தெலுங்கு திரையுலகில் அருந்ததி, தேவசேனா என பல வேடங்களில் நடித்து அதிக ரசிகர்களை சம்பாதித்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. இவர் ஆர்யாவுடன் இஞ்சி இடுப்பழகி நடத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்காக உடல் எடை கூடி குண்டாக மாறினார். ஆனால், அதன்பின் உடல் எடை குறையாததால் பல படவாய்ப்புகளை இழந்தார்.

பிரபாஸூடன் கிசுகிசு

பிரபாஸூடன் கிசுகிசு

டோலிவுட் டார்லிங் பிரபாஸுடன் அடுத்தடுத்து மிர்ச்சி, பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் ஜோடி போட்டு நடித்ததால் பிரபாஸூடன் கிசுகிசுக்கப்பட்டார். பட வாய்ப்பு இல்லாததால், வீட்டில் திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்தன. ஆனால், அனுஷ்கா திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடுவார் என்று ரசிகர்கள் நினைத்த நிலையில் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.

41வது பிறந்தநாள்

41வது பிறந்தநாள்

இந்நிலையில், நடிகை அனுஷ்கா தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதை முன்னிட்டு திரைபிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பொதுவாகவே பிரபலங்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர்கள் நடிக்கும் படங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாவது வழக்கம், அந்த வகையில் அனுஷ்காவின் பிறந்த தினமான நேற்று அவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அனுஷ்காவின் 48வது படம்

அனுஷ்காவின் 48வது படம்

அந்த போஸ்ட்டரில் அனுஷ்கா செஃப் ஆக காட்சியளிக்கிறார். யு வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நீரவ் ஷா ஒளிபதிவு செய்ய , ஜாதி ரத்னலு புகழ் நவீன் பாலிஷெட்டி இப்படத்தின் நாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக 'புரொடக்க்ஷன் நம்பர் 14' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை மகேஷ் பாபு பி இயக்குகிறார். இந்த திரைப்படம் அனுஷ்காவின் 48வது படமாக தயாராக உள்ளது. படம் குறித்த மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X