தமிழ், தெலுங்கில் கலக்கிய அனுஷ்கா...தன் சொந்த மொழியில் முதன் முதலா இப்பதான் நடிக்கப் போறாராம்!

By

சென்னை: நடிகை அனுஷ்கா, முதன் முறையக் கன்னட படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார் அனுஷ்கா. இப்போது அவர் நடிப்பில் வெளியாக உள்ள படம், சைலன்ஸ் (நிசப்தம்).

இதில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை அடுத்து கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

கன்னடத்தில்

கன்னடத்தில்

நடிகை அனுஷ்கா, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தாலும் தனது சொந்த மொழியான கன்னடத்தில் அவர் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. இந்நிலையில், கன்னடத்தில் முதன் முறையாக, அவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

நாகரத்னம்மாள்

நாகரத்னம்மாள்

பிரபல கர்நாடக இசைப் பாடகி, பெங்களூர் நாகரத்னம்மாளின் வாழ்க்கை கதை சினிமாவாக எடுக்கப்பட இருக்கிறது. இவர், மெட்ராஸ் மாகாண தேவதாசிகள் சங்கத்தின் முதல் தலைவராக இருந்தவர். திருவையாறில் தியாகராஜர் சமாதியின் மீது கோயில் எழுப்பியவர். தியாகராசர் ஆராதனை விழாவில் பெண்களும் சமமாகப் பங்குபெற வழிசெய்தவர். இவரது மூதாதையர்கள் மைசூர் அரசவையில் பாடகர்களாகவும் இசைக்கலைஞர்களாகவும் பணியாற்றியவர்கள்.

முதல் கன்னட படம்

முதல் கன்னட படம்

இவரது வாழ்க்கை கதையில், நடிகை அனுஷ்காவை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அந்த கேரக்டருக்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்பதால் அனுஷ்கா நடித்தால் மற்ற மொழிகளிலும் படத்தை வெளியிட வசதியாக இருக்கும் என்பதாலும் அவரிடம் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் அனுஷ்கா நடித்தால் அவர் நடிக்கும் முதல் கன்னடப் படம் இதுவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Recommended Video

Allu Arjun Huge Contribution | FEFSI Workers
தொடரும் கிசு கிசு

தொடரும் கிசு கிசு

இதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. நடிகை அனுஷ்காவும் பிரபல தெலுங்கு ஹீரோ பிரபாஸூம் காதலித்து வருவதாக கடந்த சில வருடங்களாக செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இருவரும் நண்பர்கள் என்று கூறி வருகின்றனர். இருந்தாலும் அவர்கள் பற்றிய கிசு கிசு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X