என்னை அந்த விஷயத்துக்கு மட்டும்தான் லாயக்கு என்று நினைத்தார்கள்.. அனுஷ்கா ஓபன் டாக்

சென்னை: தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் படு ஃபேமஸாக வலம் வந்தவர் அனுஷ்கா. அழகு மட்டுமின்றி திறமையும் கொண்டிருந்த அவர் சில வருடங்கள் கோலிவுட்டையும், டோலிவுட்டையும் சேர்த்தே ரூல் செய்துகொண்டிருந்தார். ஆனால் திடீரென அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கும் சூழலில் அவர் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்களோ அனுஷ்கா ஓபனாக பேசியிருக்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

யோகா டீச்சரான அனுஷ்கா நாகார்ஜுனா நடித்த சூப்பர் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். கிளாமர், திறமை, அழகு என அனைத்தும் பொருந்திய நடிகையாக அந்த படத்தில் வலம் வந்த அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. அப்படி அவர் நடித்த படங்களில் அருந்ததி படம் மெகா ஹிட்டானது. பேய் கதை ஜானரில் உருவாகியிருந்த அந்தப் படத்தில் அனுஷ்காவின் நடிப்பை பார்த்த பலரும் வாயடைத்துப்போனார்கள். இதனால் ஃபேமஸ் ஆக ஆரம்பித்துவிட்டார்.

தமிழில் அறிமுகம்: சூழல் இப்படி இருக்க சுந்தர்.சி இயக்கத்தில் ரெண்டு படத்தில் தமிழில் அறிமுகமானார். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் அனுஷ்காவின் அலை கோலிவுட்டிலும் அடிக்க ஆரம்பித்தது. அதன்படி வேட்டைக்காரன், சிங்கம், இரண்டாம் உலகம், லிங்கா, என்னை அறிந்தால் என பல படங்களில் நடித்தார். முக்கியமாக பாகுபலி திரைப்படம் அவரை இந்திய அளவில் கொண்டு சேர்த்தது. பாகுபலியின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு அனுஷ்காவின் கரியர் மேற்கொண்டு உச்சம் சென்றது.

Anushka Shetty s Throwback Interview Gone Trending

இஞ்சி இடுப்பழகி: அப்படி உச்சத்தில் இருக்கும்போதுதான் இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்தார். அந்தப் படத்துக்காக உடல் எடையை கூட்டினார். படம் படுதோல்வியடைந்தது. மேலும் ஏற்றிய உடல் எடையை குறைக்க முடியாமலும் தடுமாறினார் அனு. இதன் காரணமாக அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து ஒருகட்டத்தில் ஆளே காணாமல் போனார். இருந்தாலும் அனுஷ்கா மீதான கிரேஸ் ரசிகர்களுக்கு இன்னமும் அப்படியேத்தான் இருக்கிறது. இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் அவர்.

இரண்டாவது இன்னிங்ஸ்: அதன்படி அவர் நடித்த மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படம் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியானது. நீண்ட நாட்களுக்கு பிறகு அனுஷ்கா நடித்த படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் அந்தப் படம் வெளியானது. படத்துக்கு ஓரளவு நல்ல வரவேற்பே கிடைத்தது. தற்போது அவர் க்ரிஷ் இயக்கத்தில் காதி என்கிற படத்தில் நடித்துவருகிறார். இதில் விக்ரம் பிரபுவும் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். ஏற்கனவே அனுஷ்கா நடிப்பில் உருவான வானம் படத்தை க்ரிஷ்தான் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது.

அனுஷ்காவின் பேட்டி: இந்நிலையில் அனுஷ்கா கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. அந்தப் பேட்டியில் அவர், "அருந்ததி படத்தில் நான் கமிட்டானபோது எதற்காக அந்தப் பெண்ணை தேர்ந்தெடுக்கிறீர்கள். உனக்கு என்ன பைத்தியமா இவ்வளவு பெரிய படம் எடுக்கிறாய் அதில் ஏன் அனுஷ்கா. அவரெல்லாம் கவர்ச்சிக்கு மட்டும்தான் லாயக்கு என்று கூறினார்கள். ஆனால் இயக்குநர் ஷ்யாம் பிரசாத் ரெட்டியோ என்னை முழுக்க முழுக்க நம்பினார்.

காப்பி அடிப்பேன்: என் மேல் முழு நம்பிக்கையை வைத்து இந்தப் படம் ஒர்க் அவுட் ஆகும் என்று அவர் நினைத்தார். அருந்ததி படம்வரைக்குமெனக்கு ஆக்டிங் பற்றியோ, கிராஃபிக்ஸ் பற்றியோ அதிகம் தெரியாது. விக்ரமார்குடு படத்தில் நடித்தபோதுகூட ராஜமௌலி என்ன செய்தாரோ அதை அப்படியே காப்பி அடிப்பேன். சொந்தமாக நடிக்க தெரியாமல்தான் இருந்தேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X