விவாகரத்தானவருக்கு ரெண்டாம் தாரமா போறேனா.. தீயாய் பரவிய திருமண தகவலால் கடுகடுத்த பிரபல நடிகை!

சென்னை: விவாகரத்தான இயக்குநருடன் திருமணம் என்று பரவிய தகவலால் பிரபல நடிகை கடுகடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை அனுஷ்கா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உட்பட தென்னிந்திய மொழிகளில் பிரபலமானவர். கர்நாடகாவை பூர்விகமாக கொண்ட நடிகை அனுஷ்கா, சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ரெண்டு படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார்.

தமிழில் அவர் நடிப்பில் வெளியா சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றன. விஜய், விக்ரம், அஜித் என முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார் நடிகை அனுஷ்கா.

இந்திய அளவில் வரவேற்பு

இந்திய அளவில் வரவேற்பு

தொடர்ந்து தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார் அனுஷ்கா. அவரது நடிப்பில் வெளியான அருந்ததி, ருத்ரமாதேவி, பாகமதி, பாகுபலி படங்கள் பெரும் ஹிட்டடித்தன. குறிப்பாக அருந்ததி படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. பாகுபலி படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்றது.

திருமணம்..

திருமணம்..

தற்போது 38 வயதான அனுஷ்கா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே அவருக்கு மாப்பிள்ளை தேடும் பணிகளில் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகைக்கு அவருடன் திருமணம் இவருடன் திருமணம் என நாள்தோறும் ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது.

விவாகரத்தான இயக்குநர்

விவாகரத்தான இயக்குநர்

பாகுபலி படத்தில் ஜோடியாக நடித்த பிரபாஸை திருமணம் செய்துகொள்ள உள்ளார் என தகவல் பரவியது. அதன்பிறகு தொழில் அதிபர், அதனை தொடர்ந்து கிரிக்கெட் வீரர் என தகவல்கள் றெக்கை கட்டி பறந்து வந்தன. இந்நிலையில் கடைசியாக விவாகரத்தான இயக்குநர் ஒருவருக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட போகிறார் என்றும் தகவல் பரவியது.

அது உண்மையில்லை

அது உண்மையில்லை

ஆனால் நடிகை தரப்பில் எதுவும் உறுதிப்படுத்தாத நிலையில் தனது திருமணம் குறித்து பரவும் தகவல் குறித்த சற்று காட்டமாகவே விளக்கம் கொடுத்திருக்கிறார் நடிகை அனுஷ்கா. இதுதொடர்பாக அவர் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது, "அந்தச் செய்தி எதுவும் உண்மை இல்லை. இதுபோன்ற வதந்திகளால் நான் பாதிக்கப்படுவதில்லை.

சென்ஸிட்டிவான விஷயம்

சென்ஸிட்டிவான விஷயம்

எனது திருமணம் ஏன் எல்லோருக்கும் இவ்வளவு பெரிய விஷயம் என்று தெரியவில்லை. ஒரு உறவை யாரும் மறைக்க முடியாது. எனது திருமணத்தை நான் எவ்வாறு மறைக்க முடியும்? இது மிகவும் சென்ஸிட்டிவான விஷயம், மக்கள் அதை சென்ஸுடன் கையாள வேண்டும். என்னுடைய பர்சனல் விஷயத்தில் ஒருவர் தலையிட முயன்றால் எனக்கு பிடிக்காது.

பர்சனல் விஷயங்கள்

பர்சனல் விஷயங்கள்

எனக்கு என பர்சனல் விஷயங்கள் உள்ளன. யாராவது அதில் ஊடுருவ முயற்சித்தால் எனக்கு பிடிக்காது. திருமணம் என்பது ஒரு புனிதமான விஷயம். அது எல்லோரையும் போல எனக்கும் ரொம்பவே முக்கியமானது. அது உண்மையில் நடக்கும் நாள், மக்களுக்குத் தெரிய வரும். எனக்கு மகிழ்ச்சியைத் தரும் விஷயங்களை மறைக்க விரும்பாத ஒருவர் நான்.

அறிவிக்க மாட்டேன்

அறிவிக்க மாட்டேன்

நான் யாரை திருமணம் செய்கிறேன் என்று பகிரங்கமாக அறிவிக்க மாட்டேன். ஆனால் மக்கள் என்னிடம் எப்போதும் கேட்கலாம். அதை நான் வரவேற்கிறேன். நான் எப்போதும் பதிலளிக்க தயாராக இருக்கிறேன்." இவ்வாறு நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார். அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X