ராணி ருத்ரமாதேவிக்காக ரூ5 கோடி ஆபரணத்தில் ஜொலிக்கப் போகும் அனுஷ்கா
ஹைதராபாத்: அனுஷ்கா தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படமான 'ராணி ருத்ரமாதேவி'யில் சுமார் ரூ 5 கோடி மதிப்பிலான நகைகளை அணிந்து கொண்டிருக்கிறாராம்.
அருந்ததி படம் தான் அனுஷ்காவை ரசிகர்களுக்கு 'அழகிய பொம்மாயி'யாக அறிமுகப் படுத்தியது. அதன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ராணி ருத்ரமாதேவி என்ற சரித்திரப் படத்தில் நடித்து வருகிறார்.
ஏற்கனவே அழகு தேவதையான அனுஷ்கா, இப்படத்தில் ரூ 5 கோடி மதிப்பிலான நகைகளை அணிந்து ஜொலிக்கிறாராம்.

ராணி ருத்ரமாதேவி...
‘ஒக்கடு' புகழ் குணசேகர் இயக்கும் புதிய படம் ‘ராணி ருத்ரமாதேவி. இந்த படத்திற்கு இசை இசைஞானி இளையராஜா. அஜய் வின்சென்ட் ஒளிப்பதிவில், தேசிய விருது வாங்கிய ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கை பார்த்துக் கொள்கிறார்.

தமிழிலும், தெலுங்கிலும்...
இப்படம் சுமார் ரூ. 40 கோடி பட்ஜெட்டுக்கு மேல் தமிழ்-தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகி வருகிறது.

உடையும், ஆபரணங்களும்....
ஹிருத்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடித்த ‘ஜோதா அக்பர்' படத்தில் காஸ்டியூம் டிசைனராக பணி புரிந்த நீதா லுல்லா ‘ருத்ரம்மா தேவி' படத்திற்காக அனுஷ்கா அணியும் உடைகளையும், ஆபரணங்களையும் டிசைன் செய்திருக்கிறார்.

பிரம்மாண்ட நகைகள்....
ராணி ருத்ரமாதேவி கதாபாத்திரத்திற்காக, தங்கம், வைரம் ஆகியவையுடன் கூடிய பிரம்மாண்டமாக, அழகாக உடைகளையும், ஆபரணங்களையும் உருவாக்க 5 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாம்.

வாள் சண்டை....
ராணி கதாபாத்திரத்திற்காக அனுஷ்கா கத்தி பிடிக்கவும், வாள் சண்டை போடவும் சிறப்பு பயிற்சி எடுத்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

முதல் 3டி சரித்திரப்படம்...
ராணி ருத்ரமாதேவி 3டி யில் படமாக்கப்படும் முதல் சரித்திரப்படம் என்ற சிறப்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











