திருமணம் எப்போது?.. ஏன் இவ்வளவு அவசரம்.. ஓபனாக போட்டுடைத்த அனுஷ்கா

ஹைதராபாத்: தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் அனுஷ்கா. அழகும், திறமையும் ஒருசேர கொண்ட அவர் பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலம் அடைந்தார். தேவசேனா என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அவர் திடீரென சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். அதனையடுத்து மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த அவர் தற்போது காதி என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இந்தச் சூழலில் அவர் கொடுத்த பேட்டி ஒன்று படு ட்ரெண்டாகியிருக்கிறது.

தெலுங்கில் 2005ஆம் ஆண்டு சூப்பர் படத்தில் அறிமுகமான அனுஷ்கா அருந்ததி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். பேய் படமான அருந்ததியில் அனுஷ்காவின் நடிப்பு பட்டையை கிளப்பியது. அதுமட்டுமின்றி ஹீரோவுக்கு சமமான ரெஸ்பான்ஸும் கிடைத்தது. மேலும் அறிமுகமான சில வருடங்களிலேயே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்ததன் மூலம் அவருக்கு பாராட்டும் கிடைத்தது.

anushka tamil cinema kollywood

பாகுபலி அனுஷ்கா: இதனையடுத்து தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வர ஆரம்பித்தார். தமிழ், தெலுங்கில் தனித்தனி மேனேஜரை வைத்திருக்கும் அளவுக்கு பிஸியான நடிகையாக திகழ்ந்தார் அனுஷ்கா. தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்தார். பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் இந்திய அளவில் ஹிட்டடித்தது. இதனையடுத்து மேற்கொண்டு பிரபலமான அனுஷ்கா ரசிகர்களால் தேவசேனா என்று அழைக்கப்பட்டார்.

குறைந்த வாய்ப்பு: ஃபுல் ஃபார்மில் இருந்த அனுஷ்கா ஆர்யாவுடன் இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்தார். அந்தப் படத்துக்காக உடல் எடையையும் கூட்டினார். ரொம்பவே டெடிகேஷனாக அந்தப் படத்துக்கு உழைத்தாலும் படம் எதிர்பார்த்த ரிசல்ட்டை கொடுக்கவில்லை. அதுமட்டுமின்றி ஏற்றிய உடல் எடையை குறைக்க முடியாமலும் திணறினார். இதன் காரணமாக அவருக்கு பட வாய்ப்புகளும் குறைய ஆரம்பித்தன.

செகண்ட் இன்னிங்ஸ்: இந்தச் சூழலில் அனுஷ்கா தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார். அதன்படி மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என்ற படத்தில் நடித்தார். படமானது கடந்த வருடம் வெளியானது. ஜவானோடு ரிலீஸானதால் படம் அடி வாங்கிவிடுமோ என்ற எண்ணம்தான் ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் ஃபீல் குட் படமாக அந்தப் படம் அமைந்திருக்கிறது. இதன் காரணமாக செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பத்திலேயே அனுஷ்கா உற்சாகமாக இருக்கிறார்.

அனுஷ்கா பேட்டி: இப்போது அவர் காட்டி என்ற படத்தில் நடித்துவருகிறார். சில நாட்களுக்கு முன்புதான் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதற்கிடையே அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்தின் இயக்குநர் பிரகாஷ் கோவெலமுடியை ரகசிய திருமணம் செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அதுகுறித்து விளக்கமளித்திருக்கும் அவர், “என் திருமணம் ஏன் இவ்வளவு பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது என்று எனக்கு தெரியவில்லை.

மறைக்க முடியாது: ஒருவர் தனது திருமண வாழ்க்கையை நிச்சயமாக மறைத்து வைக்க முடியாது. அது சம்பந்தப்பட்டவர்களுக்கு ரொம்பவே உணர்வுப்பூர்வமான ஒன்று. எனது திருமணம் நிச்சயம் மக்களுக்கு தெரியாமல் நடக்காது. அந்த நாள் வரும்போது அனைவருக்கும் அதுகுறித்து நான் முறைப்படியான அறிவிப்பை வெளியிடுவேன்” என்றார். முன்னதாக அவர் நடிகர் பிரபாஸை காதலித்து பிரிந்துவிட்டதாக ஒரு தகவல் ஓடியது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X