வாயை கொடுத்து வம்பில் சிக்கிய அனுஷ்கா
சென்னை: தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கும் அனுஷ்கா தனக்கு இந்தி பட ஹீரோக்களை தான் பிடிக்கும் என கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக இருப்பவர் அனுஷ்கா. அவர் தற்போது லிங்கா படத்தில் ரஜினி ஜோடியாகவும், கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் ஜோடியாகவும் நடித்து வருகிறார். இது தவிர தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் ஹைதராபாத்தில் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டி தான் தற்போது அவருக்கு பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது.

ரித்திக் ரோஷன்
பேட்டியில் உங்களுக்கு பிடித்த ஹீரோ யார் என்று கேட்க அனுஷ்கா பட்டென்று ரித்திக் ரோஷன், ஷாருக்கான், அபிஷேக் பச்சனை பிடிக்கும் என்று பதில் அளித்துள்ளார்.

திரை உலகினர்
அனுஷ்கா தனக்கு பாலிவுட் ஹீரோக்கள் தான் பிடிக்கும் என்று கூறியிருப்பது தமிழ், தெலுங்கு திரை உலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ரசிகர்கள்
அஜீத், விஜய், விக்ரம், சூர்யா, நாகர்ஜுனா என்று நடித்துவிட்டு யாரை பிடிக்கும் என்று கேட்டால் பாலிவுட் நடிகர்களையா கூறுகிறீர்கள் என்று ரசிகர்கள் கொந்தளித்துவிட்டனர்.

திட்டித் தீர்ப்பு
உடன் நடித்துள்ள ஒரு நடிகரின் பெயரைக் கூட தெரிவிக்காத அனுஷ்காவை தமிழ், தெலுங்கு ரசிகர்கள் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் அவரை திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











