Don't Miss!
- Sports PBKS vs MI : என்னா அடி.. பீதியை கொடுத்திட்ட தம்பி.. அஷுதோஷ் சர்மாவை நேரடியாக பாராட்டிய அம்பானி மகன்!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அனுஷ்காவின் மேக் அப் பிரச்சினை எப்போ தீரும்?
அனுஷ்காவின் பெர்சனல் மேக் அப் பெண் இன்னமும் யூனியனின் உறுப்பினராகவில்லை என்ற பஞ்சாயத்து நீடித்து வருகிறது. மேக் அப் பெண் பிரச்சினையினால் படப்பிடிப்பில் இருந்து அனுஷ்கா கண்ணீருடன் வெளியேறிய சம்பவமும் நடந்துள்ளது.
அலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்பில் அழுத அனுஷ்கா
தனக்கென்று சொந்தமாக மேக் அப் பெண் வைத்துள்ளார் அனுஷ்கா. கார்த்தி நடிக்கும் அலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்பில்தான் இதற்கான சிக்கல் உருவானது. யூனியனில் மெம்பராக இல்லாதவரை மேக் அப் போட அனுமதிக்க முடியாது என்று கண்டபடி திட்டி அனுஷ்காவை அழவைத்தனர் சங்க உறுப்பினர்கள்.
வஞ்சம் தீர்த்த அனுஷ்கா
இதனை மனதில் வைத்துக்கொண்டிருந்த அனுஷ்கா ஜார்ஜியாவில் நடந்த ‘இரண்டாம் உலகம்' படப்பிடிப்பில் யூனிட்டை சேர்ந்தவர்களுக்கு எந்த பரிசும் வழங்காமல் வெறும் விருந்துடன் நிறுத்திக் கொண்டாராம்.
டிரைவருக்கு கார் ஏன்?
ஜார்ஜியாவில் தனக்கு கார் ஓட்டிய டிரைவருக்கு மட்டும் கார் வாங்கிக் கொடுத்துள்ளார் அனுஷ்கா. இதை பெருமையுடன் அந்த டிரைவர் சொன்னபோது இது தங்களை சீண்டிப்பார்க்கும் செயல் என்று பொருமியுள்ளனர் யூனிட்டை சேர்ந்தவர்கள்.
முகத்தை யாரும் தொடக்கூடாது
நான் நடிக்கவேண்டும் என்றால் என்னுடைய மேக் அப் பெண்தான் என்முகத்தை தொட்டு மேக் அப் போடவேண்டும் என்பது அனுஷ்காவின் வாதம்
மெம்பராக வேண்டும்: யூனியன் கறார்
இத்தனை பிரச்சினை ஏற்பட்டுள்ள நிலையிலும் இன்னமும் தன்னுடைய மேக் அப் பெண்ணை யூனியனில் மெம்பராக்கவில்லையாம் அனுஷ்கா. யாராக இருந்தாலும் யூனியனில் மெம்பராகவேண்டும் என்று பெப்சி மேக் அப் யூனியன் கறார் காட்டுகிறது.
தானாகவே மேக் அப் போட்ட அனுஷ்கா
மேப் அப் பெண்ணிற்கு ஏற்பட்ட பிரச்சினையால் ஜார்ஜியாவில் நடந்த ‘இரண்டாம் உலகம்' படப்பிடிப்பில் வேறு யாரையும் தொடவிடாமல் தானாகவே மேக் அப் போட்டுக் கொண்டாராம் அனுஷ்கா.